Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏய் எப்புட்றா.. கண்ணை மூடி திறப்பதற்குள் ஷாக்.. ஜட்டுவின் ஸ்பின்னால் விழிப்பிதுங்கி நின்ற லபுசாக்னே

இந்தூர்: பார்டர் கவஸ்கர் கோப்பையின் 3வது டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை கைப்பற்றிவிட்டார் என்பது துளிக்கூட நம்பாத மார்னஸ் லபுசாக்னே குழப்பத்தில் ஆழ்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்கு பேட்டிங்கில் செயல்படவில்லை. முன்னணி வீரர்கள் அனைவரும் சொதப்ப 109 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

3வது டெஸ்ட் போட்டி

3வது டெஸ்ட் போட்டி

சுழற்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் டேர்ன் ஆகும் வகையில் பிட்ச் இருந்ததால் இந்தியா சொதப்பியது எனக்கூறலாம். ஆனால் ரவீந்திர ஜடேஜா ஏன் சொதப்பினார் என்ற கேள்வி தான் சமூக வலைதளம் முழுக்க உள்ளது. 12 ரன்களுக்கெல்லாம் முதல் விக்கெட் சரிந்துவிட்ட சூழலில் 2வது விக்கெட்டாக லபுசாக்னேவையும் 4வது ஓவரிலேயே வீழ்த்தினார் ஜடேஜா. ஆனால் அது நோ பாலாக மாறியது.

மோசமான விளைவு

மோசமான விளைவு

இதன் விளைவாக மார்னஸ் லபுசாக்னே - உஸ்மான் கவாஜா ஜோடி இணைந்து 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். எனினும் தான் செய்த தவறை ஜடேஜாவே சரிசெய்தார். 91 பந்துகளில் 31 ரன்கள் அடித்து செட்டிலாகி இருந்த லபுசாக்னே மீண்டும் ஜட்டுவிடம் சிக்கினார். தொடர்ச்சியாக ஃபுல்லர் லெந்த் பந்துகளை வீசி வந்த ஜடேஜா திடீரென வேகத்தை மட்டும் சற்று அதிகரித்து வீசினார். இதனால் பந்து டேர்னாகி ஸ்டம்பில் மோதியது.

ஷாக்கான மார்னஸ்

ஷாக்கான மார்னஸ்

அதே போன்ற பந்துகளை நன்கு ஆடி வந்த லபுசாக்னே, இந்த முறை எப்படி பந்து உள்ளே வந்தது என்றே புரியாமல் திகைத்து நின்றார். அதுவும் ஸ்டம்பை கவர் செய்து நின்ற போதும் கண் இமைப்பதற்குள் உள்ளே நுழைந்துவிட்டது. இதனால் அதிருப்தியுடன் வெளியான லபுசாக்னே டக் அவுட்டிற்கு சென்ற பிறகும் தனது விக்கெட்டை பார்த்துக்கொண்டே இருந்தார்.

4 முறை அவுட்

4 முறை அவுட்

இந்த தொடரில் ரவீந்திர ஜடேஜாவிடம் 4வது முறையாக அவுட்டாகிறார் மார்னஸ் லபுசாக்னே. நாக்பூர் டெஸ்டில் 2 இன்னிங்ஸ்களிலும், டெல்லி டெஸ்டில் முதல் இன்னிங்ஸிலும் ஜடேஜாவிடம் சிக்கி தான் வெளியேறினார். இதனால் எப்படி தான் ஜடேஜாவை சமாளிப்பது என்று புரியாமல் லபுசாக்னே குழப்பத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, March 1, 2023, 19:10 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+