Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி செய்யும் தில்லாலங்கடி வேலை.. அவுட் ஆகாமல் தடுக்க குறுக்கு வழி.. சதியை முறியடிக்குமா இந்தியா

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் வக்கெட்டுகள் விழாமல் இருக்க, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு தில்லாலங்கடி வேலையை செய்து வருகிறார்கள். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில், இந்தியா முதலில் பந்துவீசி வருகிறது.

வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும், ஆடுகளத்தில் புற்கள் இருப்பதாலும், பந்து நன்றாக ஸ்விங் ஆனது. இதனை எதிர்கொள்வதற்காக ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் கிரீசை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றனர்.

Marnus labuschagne weird tatics to avoid lbw vs india in wtc final

இதன் மூலம் பந்து ஸ்விங் ஆவதற்கு முன்பே அதனை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்க முறையாக இது பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், மார்னஸ் லாபஸ்சேன், கிரீசை விட்டு நன்றாக தள்ள நின்றார். இதற்கு ஒரு காரணம் இருக்கிறார். மார்னஸ லாபஸ்சேன் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய போது தொடர்ந்து எல்பிடபிள்யூ ஆனார்.

இதன் மூலம் எல்பிடபிள்யூ ஆவதை தடுக்கும் விதமாக தான், அவர் கிரிசை விட்டு தள்ளி நின்றார். இதன் மூலம், பந்து காலில் பட்டாலும், அது அவுட்டா, இல்லையா என்று கணிக்க நடுவருக்கு சிரமமாக இருக்கும். வெளிநாட்டில் பந்தின் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் என்பதால், கிரிசை விட்டு தள்ளி நிற்கும் போது பந்து காலில் பட்டாலும், அது ஸ்டம்பில் படுமா என்று நடுவரால் கணிக்க முடியாது. இதனால், அவர் நாட் அவுட் தான் தருவார்.

இதனால், டிஆர்எஸ் முடிவை இந்தியா நாடினால் கூட, நடுவர் நாட் அவுட் தருவதால், பந்து ஸ்டம்பில் பட்டதாக கணிக்கப்பட்டால் மட்டுமே அது அவுட்டாக மாறும். ஆனால், ஆடுகளத்தின் பவுண்ஸ் இருப்பதால், அதற்கும் வாய்ப்பு குறைவு. இதனால் இப்படி நிற்பதன் மூலம் எல்பிடப்ள்யூ ஆக முடியாது. இதனை தடுப்பதற்காக சில பந்துகளில் கேஎஸ் பரத் ஸ்டம்புக்கு அருகில் வந்து நின்றது குறிப்பிடத்தக்கது. இந்த யுத்தியை இந்திய அணி வீரர்களும் காப்பி அடித்து விளையாடுவதில் தவறு இல்லை. ஏனென்றால், எதிர் அணி செய்யும் நுணுக்கங்கள் பயன் அளித்தால், அதனை நீங்களும் செய்ய பழகுங்கள் என்பது தல தோனியில் அறிவுரைகளில் ஒன்றாகும்.

Story first published: Wednesday, June 7, 2023, 17:16 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+