Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தெறிக்கவிட்ட குப்தில்..... 35 பந்துகளில் சதம்... டி-20ல் புதிய சாதனை!

லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் அடித்தார். டி-20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்துகளில் சதம் என்ற சாதனையில் 4வது இடத்தைப் பிடித்தார்.

இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையேயான டுவென்டி20 பிளாஸ்ட் என்ற டி-20 போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆட்டத்தில் நாரத்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிராக வோர்செஸ்டர்ஷைர் அணி விளையாடியது.

martin guptill smashes century in t-20

188 ரன்கள் வெற்றி இலக்கு என்ற நிலையில் பேட்டிங் செய்த வோர்செஸ்டர்ஷைர் அணி 7 ஓவர்கள் மீதமிருக்கையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்காக விளையாடிய நியூசிலாந்தின் மார்ட்டின் குப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். அதில் 12 பவுண்டரிகள், 7 சிக்சர்களும் அடங்கும்.

இதன் மூலம், டி-20 போட்டிகளில் மிகவும் குறைந்த பந்தில் சதம் என்ற சாதனைப் பட்டியலில் நான்காவது இடத்தை மேலும் 3 பேருடன் பகிர்ந்து கொள்கிறார். அந்த அணியின் ஜோ கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இருவரும் இணைந்து 10 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தனர்.

டி-20 வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் வைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 2013ல் 30 பந்துகளில் அவர் சதமடித்தார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டியின் டெல்லியின் ரிஷப் பந்து 32 பந்துகளில் சதமடித்து 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ சைமண்ட் 34 பந்துகளில் சதமடித்துள்ளார்.

நமீபியாவின் லூயிஸ் வான் டெர் வெஸ்தூய்சன், தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், இந்தியாவின் ரோஹித் சர்மா ஆகியார் 35 பந்துகளில் சதம் அடித்துள்ளனர். அந்தப் பட்டியலில் குப்தில் இணைந்துள்ளார்.

Story first published: Saturday, July 28, 2018, 16:18 [IST]
Other articles published on Jul 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+