Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த படை போதுமா... இன்னும் கொஞ்சம் வேணுமா... சிஎஸ்கேவுல இணைந்த புது பௌலர்!

அகமதாபாத் : ஐபிஎல் 2021 தொடரின் நாளைய 24வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Recommended Video

Robin Uththappa-வை CSK-விடம் மீண்டும் கேட்கும் Rajasthan அணி.. Transfer திட்டமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அணியின் முக்கிய பௌலர் ஜோஷ் ஹாசல்வுட் அணியை விட்டு நீங்கினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய பௌலர் தனது குவாரன்டைனை முடித்துக் கொண்டு இன்று முதல் பயிற்சியில் இணைந்துள்ளார்.

24வது போட்டி

24வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் நாளைய 24வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. முதலிடத்தில் 8 புள்ளிகளுடன் உள்ள சிஎஸ்கே, ஒரேயொரு வெற்றியுடன் இறுதியிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணியுடன் இந்த போட்டியில் மோதவுள்ளது.

சிஎஸ்கேவின் வெற்றிமுகம்

சிஎஸ்கேவின் வெற்றிமுகம்

ஐபிஎல் 2021 தொடர் சிஎஸ்கேவிற்கு சிறப்பாக துவங்கியுள்ளது. முதல் போட்டியில் தோல்வியடைந்த அந்த அணி அடுத்து மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிமுகம் காட்டி வருகிறது. மேலும் புள்ளிகள் பட்டியலிலும் ஆர்சிபி, டெல்லி அணிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

சன்ரைசர்ஸ் தீவிரம்

சன்ரைசர்ஸ் தீவிரம்

இந்நிலையில் நாளைய போட்டியில் சன்சரைசர்ஸ் அணியுடன் மோதவுள்ளது சிஎஸ்கே. அணியில் சில சொதப்பல்களுடன் தொடர் தோல்விகளை கண்டுவந்தாலும், தொடர்ந்து 4 தோல்விகளையும் ஒரு வெற்றியையும் பெற்றுள்ள அந்த அணி அடுத்து ஒரு வெற்றியையாவது பெற வேண்டும் என்ற தீவிரம் காட்டி வருகிறது.

கலக்கல் ஆட்டம்

கலக்கல் ஆட்டம்

இந்நிலையில் நாளைய போட்டி ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து பௌலிங் பேட்டிங் இரண்டிலும் கலக்கிவரும் சிஎஸ்கேவின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கடந்த போட்டியில் சிறப்பான போட்டியை அளித்து ஆர்சிபிக்கு எதிரான போட்டியை அணிக்கு சாதகமாக்கினார்.

ஹாசல்வுட் நீக்கம்

ஹாசல்வுட் நீக்கம்

அணியின் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹாசல்வுட் பயோ பபுள் உள்ளிட்ட காரணங்களை கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு அணியிலிந்து விலகினார். இதனால் அணி சிறிது ஸ்தம்பித்தது. ஆயினும் மற்ற வீரர்கள் சிறப்பாக அணிக்கு கை கொடுத்து வருகின்றனர்.

அணியில் இணைந்த பௌலர்

அணியில் இணைந்த பௌலர்

அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேர்ந்தெடுக்கும் தலைவலி சிஎஸ்கேவிற்கு இருந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய பௌலர் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் ஹாசல்வுடடுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இநநிலையில் அவர் தனது 7 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு தற்போது அணியின் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

சிறப்பான பலம்

சிறப்பான பலம்

இவர் கடந்த 2018ல் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டு, காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார். கடந்த 2019ல் 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்த சீசனில் இவர் சிஎஸ்கேவிற்கு சிறப்பான பலமாக அமைவார் என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Tuesday, April 27, 2021, 20:48 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+