Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“சச்சின்.. ப்ளீஸ் இதை மட்டும் செய்யுங்க”.. இந்தியா மாஸ்டர்ஸ் வெற்றிக்கு பின் ரசிகர்கள் கோரிக்கை

ராய்ப்பூர்: 2025 இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் எனும் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தை பார்க்க ராய்ப்பூர் மைதானத்தில் 47,322 ரசிகர்கள் திரண்டனர். அந்த மைதானம் முழுமையாக நிரம்பி வழிந்தது.

இந்த இறுதிப் போட்டியில் சச்சின் 25 ரன்கள் சேர்த்தார். இந்தியா மாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையையும் வென்றது. இந்த தொடரில் சச்சினின் ஆட்டம் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் அளித்தது.

Massive Fan Turnout for Sachin Tendulkar in International Masters League Final

மற்றொரு கிரிக்கெட் ஜாம்பவான் ஆன பிரையன் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், அம்பத்தி ராயுடு போன்ற இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

51 வயதான சச்சினின் ஆட்டத்தை பார்க்கவே ரசிகர்கள் பெரும்பளவில் அங்கு கூடியிருந்தனர். அந்த இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 148 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி அந்த இலக்கை 17.1 ஓவர்களில் எட்டி வெற்றி பெற்றது. சச்சின் டெண்டுல்கர் இந்த இறுதிப் போட்டியில் 18 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்தார்.

இந்த தொடரில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் பல 40 வயது ஒட்டிய வீரர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களுடன் 51 வயதான சச்சின் போட்டி போட்டு இத்தனை ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் சச்சினின் ஷாட்களை பார்க்கவே ரசிகர்கள் நேரில் வந்திருந்தனர்.

மேலும் நேரலையிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் சச்சின் பேட்டிங் செய்வதை பார்த்து ரசித்தனர். அவர் அடிக்கும் ஸ்ட்ரைட் டிரைவ் மற்றும் கவர் ஷாட்களை பார்ப்பதற்கு என்று இத்தனை ரசிகர்களும் ஒன்று திரண்டு இருந்தனர். இந்த முறை இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரில் சச்சின் டெண்டுல்கர் 7 போட்டிகளில் ஆடி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.

Massive Fan Turnout for Sachin Tendulkar in International Masters League Final

"இதேபோல ஒவ்வொரு ஆண்டும் இந்த இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் தொடரை நடத்த வேண்டும், அதில் சச்சின் பங்கேற்க வேண்டும்" என சச்சின் ரசிகர்கள் கோரிக்கை வைக்க துவங்கியுள்ளனர்.

இந்த இறுதிப் போட்டியில் 50 பந்துகளில் 74 ரன்கள் சேர்த்தார் அம்பத்தி ராயுடு. அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி இந்தியா மாஸ்டர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். யுவராஜ் சிங் 11 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

Story first published: Monday, March 17, 2025, 7:33 [IST]
Other articles published on Mar 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+