For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Happy birthday Sachin: கிரிக்கெட் ஜாம்பவான், கடவுள் சச்சினுக்கு பிறந்த நாள்.. குவியும் வாழ்த்துகள்

Recommended Video

Sachin 46th Birthday | கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு பிறந்த நாள்: குவியும் வாழ்த்துகள்!

மும்பை:கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சினுக்கு இன்று பிறந்த நாள்.. உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள், பிரபல வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் என்ற வார்த்தையை கேட்காத கிரிக்கெட் ரசிகர்கள் இந்த உலகத்தில் இருக்கவே முடியாது. அப்படி யாரேனும் இருந்தார்கள் என்றால்... அவர்களுக்கு கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது என்று அறுதியிட்டு கூறலாம்.

அந்த ஜாம்பவானுக்கு இன்று ஹேப்பி பர்த் டே... ! லிட்டில் மாஸ்டர், கிரிக்கெட் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர் என்ற அடைமொழியுடன் கிரிக்கெட் உலகில் தனி முத்திரை பதித்த அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சென்னை அணியின் தொடர் வெற்றி ரகசியம் என்ன...? முதன் முறையாக மனம் திறக்கும் தல தோனி சென்னை அணியின் தொடர் வெற்றி ரகசியம் என்ன...? முதன் முறையாக மனம் திறக்கும் தல தோனி

தீராத பற்று

தீராத பற்று

1973ம் ஆண்டு இதே தினத்தில் மும்பையில் பிறந்த சச்சின் சிறு வயது முதலே கிரிக்கெட்டில் தீராத பற்று கொண்டவர். சச்சினின் கிரிக்கெட் ஆர்வத்தை உணர்ந்த அவரின் தந்தை ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் கொண்டு போய் சேர்த்தார்.

கிரிக்கெட்டின் முனைவர்

கிரிக்கெட்டின் முனைவர்

10ம் வகுப்பு வரை பயின்ற சச்சின், கிரிக்கெட்டில் அவர் முனைவர் என்றால் அது மிகையாகாது.. அந்த அளவிற்கு உலக அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவையும், இந்திய மக்களையும் பெருமைப்படுத்தியவர்.

1989ல் ஆடினார்

1989ல் ஆடினார்

முதன்முறையாக சச்சின் 1989ம் ஆண்டு 16வது வயதில் இந்தியாவின் சார்பாக தேர்வு போட்டிகளில் விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வு தொடரில் அரை சதம் எடுத்தார்.

100 சதங்கள் அடித்தவர்

100 சதங்கள் அடித்தவர்

24 ஆண்டுகள் கிரிக்கெட்டுடனே வலம் வந்த சச்சின், சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர். ஆனால், தாம் முதலில் விளையாடிய 79 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இது பலருக்கு தெரியாத விஷயம் என்று கூட சொல்லலாம்.

சிம்ம சொப்பனம்

சிம்ம சொப்பனம்

தனது நேர்த்தியான பேட்டிங்கின் மூலம் எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மாஸ்டர் பிளாஸ்டர். 24 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தனது பேட்டை பயன்படுத்தி எதிரணியை மிரட்டும் சச்சினுக்கு உலக அரங்கில் ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம்.

இரட்டை சதம் சாதனை

இரட்டை சதம் சாதனை

ஒருநாள் போட்டிகளில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரை பேட்டிங் ஸ்டெய்லை பின்பற்றாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

உலக கோப்பை

உலக கோப்பை

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்திய அணியில் 6 உலக கோப்பைகளை சந்தித்த சச்சினுக்கு, 2011ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டு. அந்த ஆண்டில் தான் தோனி தலைமையிலான இந்திய அணியில் விளையாடினார்.

கனவு நனவானது

கனவு நனவானது

தனி நபராக பல சாதனைகளை படைத்த போதிலும், உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே சச்சினின் கனவாக இருந்து வந்தது. 1983ம் ஆணடுக்கு பிறகு.... 2011ம் ஆண்டு இந்திய அணி 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியதனால் கனவு நனவானது கூறியவர் அவர்.

463 ஒன்டே மேட்ச்

463 ஒன்டே மேட்ச்

200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 15,921 ரன்களை குவித்துள்ளார். இதில் 51 சதங்களும், 68 அரை சதங்களும் அடங்கும். இதேபோல, 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர்18,426 ரன்களை குவித்துள்ளார். இதில் 49 சதங்களும் 96 அரை சதங்களும் அடக்கம்.

பெற்ற விருதுகள்

பெற்ற விருதுகள்

விளையாட்டுத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவருக்கு 1994ம் ஆண்டு அர்ஜூனா விருது அளிக்கப்பட்டது. அதன்பின்னர் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது.

பாரத ரத்னா

பாரத ரத்னா

தொடர்ந்து, பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷண் உள்ளிட்ட பல விருதுகளும் அவரை தேடி வந்தன. இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பாரத ரத்னாவும் கடந்த 2014ம் ஆண்டு சச்சினுக்கு வழங்கப்பட்டது.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

பல்வேறு சாதனைகள் படைத்த சச்சினுக்கு இன்று பிறந்தாள். இதனையொட்டி பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாமும் தெரிவிப்போம்... ஹேப்பி பர்த்டே சச்சின்... !!

Story first published: Wednesday, April 24, 2019, 11:19 [IST]
Other articles published on Apr 24, 2019
English summary
Master blaster sachin tendulkar birthday today, his fans, cricket players wishes him.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X