For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாரும் செய்யாதது… இதுதான் என் முதல் அனுபவம்… பார்பர்ஷாப் பெண்களை நேரில் சென்று கவுரவித்த சச்சின்…!

லக்னோ:உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் நடத்தும் பார்பர்ஷாப்புக்கு சென்று அவர்களை கவுரவிக்கும் விதமாக சவரம் செய்துகொண்டு அசத்தி இருக்கிறார் நமது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

கடந்த ஏப்ரல் 26ம் தேதி மிகப்பெரிய தனியார் நிறுவனம், தமது விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த விளம்பரத்தை இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். அப்படி என்ன தான் அந்த விளம்பரம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று அனைவரும் நினைக்கலாம்.

விஷயம் இதுதான்... உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்னும் குக்கிராமம் ஒன்று உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஜோதி மற்றும் நேஹா ஆகிய 2 பெண்கள். தந்தையின் இறப்பிற்குப் பின் துவண்டு விடாமல் தன்னம்பிக்கையுடன் தமது தந்தையின் தொழிலையே தொடர முடிவு செய்தனர். தந்தை பிடித்த சவரக் கத்தியை 2 பெண்களும் பங்குபோட்டு கொண்டனர்.

உலக கோப்பையே உங்க கையில தான் இருக்கு.. இந்திய இளம்வீரரை பாராட்டும் நம்ம யுவி உலக கோப்பையே உங்க கையில தான் இருக்கு.. இந்திய இளம்வீரரை பாராட்டும் நம்ம யுவி

கவர்ந்த விளம்பரம்

கவர்ந்த விளம்பரம்

அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தான் அந்த விளம்பரமும் எடுக்கப்பட்டுள்ளது. விளம்பரத்தின் முடிவில் இரண்டு பெண்களுக்கும் சல்யூட் கூறி மரியாதை செலுத்தும் வகையில் வீடியோ நிகழ்ச்சியும் முற்று பெற்றிருக்கும். அந்த வீடியோவை பார்த்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேரடியாக அந்த கடைக்கு சென்றே ஷேவ் செய்திருக்கிறார்.

எனது முதல் அனுபவம்

அதில் என்ன பெரிய ஆச்சரியம் என்று நினைக்கலாம். அவர் ஷேவ் செய்தது சலூன் கடையில் இருந்த பெண்ணிடம்.... அதுமட்டுமல்ல தமது வாழ்நாளில் இது வரை மற்றவர்களிடம் ஷேவ் செய்ததே இல்லை... இது தான் முதல் அனுபவம் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்துள்ளார்.

மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி

மேலும் சலூன் கடையில் பெண்களை பார்ப்பது மிகுந்த பெருமை அடைய செய்கிறது. அவர்களுக்கு எனது மரியாதையும், தனியார் நிறுவனம் அளித்த உதவித் தொகையும் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சச்சின் கூறியிருக்கிறார். சச்சினின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

ஜோதி மற்றும் நேஹாவின் தொழிலை அங்கிருக்கும் மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அரசாங்கத்தால் முரண்பாடுகளுக்காக போராடியவர்கள் என்கிற விருதை இருவரும் பெற்றுள்ளனர். சமூகத்தில் ஆண், பெண் என்ற பேதம் எதுவும் இல்லை. அதை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஜோதி மற்றும் நேஹா சலூன் கடைக்கு நேரில் சென்றிருப்பதை பாராட்டுவதை விட வேறு என்ன சொல்ல முடியும். சபாஷ்..... சச்சின்.....!!

Story first published: Saturday, May 4, 2019, 12:25 [IST]
Other articles published on May 4, 2019
English summary
Master blaster sachin tendulkar gets a shave from barbershop girls of uttar Pradesh.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X