சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத்தை முதல்முறையாக வீழ்த்தி பத்தாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னை போன்ற ஆடுகளத்தில் 173 ரன்கள் என்ற இலக்கெல்லாம் எளிதாக எட்ட கூடியதாகும்.அதுவும் குஜராத் அணி சேஸிங் இல் கில்லியாக திகழ்கிறார்கள். ஐபிஎல் வரலாற்றில் அவர்கள் வெறும் மூன்று முறை மட்டுமே சேஸிங்கிள் இந்தப் போட்டிக்கு முன் தோல்வி தழுவி இருக்கிறார்கள்.
இதனால் இந்த இலக்கு எல்லாம் அவர்களுக்கு லட்டு சாப்பிடுவது போல் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதினர். ஆனால் தோனி பொறுத்தவரை கையில் என்ன இருக்கிறதோ அதனை வைத்து வெற்றி பெற முயற்சி செய்வார். ஐயோ! குறைவாக அடித்து விட்டோமே, இந்த போட்டி அவ்வளவுதான் என்பது குறித்து எல்லாம் யோசிக்க மாட்டார். கடைசி வரை களத்தில் நின்று சண்டை செய்வதே தோனியின் ஸ்டைல்.

இதனால் தான் இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே ரவி சாஸ்திரி, சிஎஸ்கே 172 ரன்கள் அடித்திருக்கலாம்.ஆனால் தோனி தன்னுடைய சிறப்பான கேப்டன்சியின் மூலம் இதனை 190 ரன்கள் துரத்தினால் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது போல் போட்டியை மாற்றி விடுவார் என்று கூறியிருந்தார்.
கடைசியில் அவர் கணித்தது போலவே நடந்தது. குஜராத் பேட்டிங்கில் முடிந்த வரைக்கும் பவர் பிளேவில் ரன்களை கட்டுப்படுத்த தோனி பார்த்தார். அதற்கு அவர் எடுத்த முதல் படி, சுப்மன்கில் பேட்டிங் செய்யும்போது ஸ்டெம்ப அருகே வந்து நின்றது தான். இதன் மூலம் சுப்மன் கில், தனது கால்களை நகர்த்த முடியாமல் ஒரே இடத்தில் நின்று அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இதனால் குஜராத் அணியால் பவர் பிளேவில் பெரிய இலக்கை எட்ட முடியவில்லை. சரி வேகப்பந்துவீச்சு நன்றாக ஆடுகளத்தில் எடுபடுகிறது, இதனால் குஜராத் வீரர்கள் ரன் அடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட தோனி உடனடியாக சுழற் பந்துவீச்சாளரை அழைத்து நெருக்கடி கொடுத்தார்.தீக்சனா அபாரமாக செயல்பட்டதை அடுத்து மீண்டும் ஜடேஜாவை மறுமுனையில் இருந்து அட்டாக் செய்தார்.

இதன் காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டது. பொதுவாக கேப்டன்கள் ஒரு ஓவரில் ஒரு பில்டிங்கை நிறுத்தி வைத்தால், அதனை பெரிய அளவில் மாற்ற மாட்டார்கள். ஆனால் தோனி பேட்ஸ்மேன்கள் எந்த திசையில் தான் அடிப்பார் என்பதை முன்கூட்டியே அனுமானம் செய்து பில்டிங்கை மாற்றினார். குறிப்பாக ரஷீத் கான் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தோனி, தீபக்சாகர் ஆகியோர் இணைந்து ரஷித் கான் கவர் திசையில் அடிப்பார். அதனால் அங்கே பந்தை வீசி நேராக பில்டர் இடம் பிடிப்படும் படி திட்டத்தை மாற்றி அமைத்தார்.
தோனி கணித்தப்படியே அவர் வைத்த பொறியில் ரசித் கான் எலி போல் சிக்கினார். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே வீரர்கள் அதிக Wide பந்துகளை வீசினார்கள். அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. ஆடுகளம் தோய்வாக இருக்கும் போது Wide யாக்கர் பந்து வகைகளை வேகம் குறைவாக வீசினால். அதனை அடிக்கும் நோக்கில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் கேட்ச் ஆகி விடுவார்கள்.
ஆனால் இந்த வகை பந்து வீசும் போது அதிக wideகள் போட நேரிடும். இதை சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செய்தார்கள். அதிக ஒயிடு சென்றும் டோனி கோபமடையாமல் பிளான் படியே வீசு என்று சைகையில் இருந்து கூறி வந்தார். இதேபோன்று தேஷ்பாண்டே தேவையில்லாமல் லெக் சைடில் பந்து வீசிக்கொண்டிருந்த போது உடனே ஆப் சைடில் இவ்வளவு பில்டர்கள் நிக்கும் போது நீ என் லெக் சைடில் பந்து வீசினாய் என களத்தில் அவருக்கு பாடம் எடுத்தார்.

குஜராத் அணி 98 ரன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும் அவர்கள் 15 ரன்கள் வித்தியாசத்தில் தான் தோல்வியை தழுவினார்கள். இது அந்த அணி சேசிங்கில் எவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த ஆட்டத்தில் தோனியை தவிர வேறு எவரும் கேப்டன்ஷிப் செய்திருந்தால் கூட சென்னை அணி தோல்வியை தழுவி இருக்கும்.
தோனி போன்ற மாஸ்டர் கேப்டன்சியால் மட்டுமே இது போன்ற வெற்றியை பெற்று இறுதியால் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு குருபாயை வீழ்த்த, நீ குருபாயாக மாற வேண்டும். ஆனால் இங்கு குருபாய் நான் மட்டும் தான் என்ற வசனத்திற்கு தகுதியானவர் தோனி.