For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொலையை விட மோசமானது இதுதான்.. தல தோனி ஓபன் டாக்

Recommended Video

Roar of the lion | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்குமென்டரி டிரெய்லர் வெளியீடு

சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டாக்குமென்டரி படத்தின் டிரெய்லரில் அந்த அணியின் கேப்டனான 'தல' தோனி, கொலைக்கும் மேலான குற்றம் மேட்ச் பிக்சிங் என்று பேசியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரின் 12 வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. ஒன்றரை மாதங்கள் வரை நடைபெறும் இத் தொடர் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடரில், மற்ற அணிகளை விட திறமையான அணியாக திகழ்வது சென்னை சூப்பர் கிங்ஸ் தான். அணியின் கேப்டன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி, மற்றும் பல முன்னணி வீரர்கள் இருப்பது காரணம்.

அடக்கடவுளே! இப்படியா பேசுவாங்க? தவானை சகட்டு மேனிக்கு விமர்சித்து அசிங்கப்பட்ட கம்பீர்! அடக்கடவுளே! இப்படியா பேசுவாங்க? தவானை சகட்டு மேனிக்கு விமர்சித்து அசிங்கப்பட்ட கம்பீர்!

3 முறை சாம்பியன்

3 முறை சாம்பியன்

தோனியின் தலைமையில், இதுவரை 3 முறை கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது. பங்கேற்ற அனைத்து தொடர்களிலும், பிளே-ஆப், மற்றும் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது.

2 ஆண்டுகள் விளையாட தடை

2 ஆண்டுகள் விளையாட தடை

2015ம் ஆண்டு அந்த அணியின் உரிமையாளர் மேட்ச் பிக்ஸிங் புகாரில் சிக்கியதால், 2 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்டது.

டிரெய்லர் வீடியோ

இந்நிலையில், சென்னை அணியை பற்றி உருவாகி உள்ள டாக்குமென்டரி படத்தின் டிரெய்லர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் வரும் தோனி கூறியிருப்பதாவது:

கொலையைவிட குற்றம்

கொலையைவிட குற்றம்

தன் வாழ்க்கையில் கொலையை விட பெரிய குற்றமாக கருதுவது மேட்ச் பிக்சிங்கை தான். அந்த குற்றச்சாட்டு அணி மீதும் தன்மீதும் எழுந்தது.

கஷ்டமான நிலை

கஷ்டமான நிலை

அப்போது அனைவருக்கும் கஷ்டமான சூழலை உருவாக்கியது. இந்த குற்றச்சாட்டால் அணிக்கு விதிக்கப்பட்ட தடையை ரசிகர்கள் மிகவும் மோசமானதாக கருதினர்.

உணர்ச்சிகரமானது

உணர்ச்சிகரமானது

ஆனால், சென்னை அணி மீண்டும் திரும்பி இருக்கிறது. அது உணர்ச்சிகரமான நிகழ்வு, என்று டிரெய்லரில் கூறியிருக்கிறார். டிரெய்லரின் முடிவில் பேசும் தோனி, எது நம்மை அழிக்கவில்லையோ, அது நம்மை வலிமைப்படுத்தும் என்றும் கூறுகிறார்.

அனைவரும் பிரமிப்பு

அனைவரும் பிரமிப்பு

இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின் திரும்பிய சென்னை அணி வந்ததும் கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியின் தன்னம்பிக்கை, அனைவரையும் பிரம்மிப்படைய செய்தது.

புதிய வரலாறு

புதிய வரலாறு

இந்த சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் சிஎஸ்கே அணி புதிய வரலாறு படைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அது தவிர சிஎஸ்கேவின் டாக்குமென்டரி படத்தையும் அவர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Story first published: Monday, March 11, 2019, 15:19 [IST]
Other articles published on Mar 11, 2019
English summary
Match-fixing is a bigger crime than murder, says dhoni.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X