For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் 2021 தொடரோட தேதி அறிவிச்சாச்சு... சிஎஸ்கே போட்டிகளை பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Recommended Video

ஏப்ரல் 9-ல் ஐ.பி.எல். தொடக்கம்: பி.பி.சி.ஐ. அறிவிப்பு!

மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் 9ம் தேதி துவங்கவுள்ள நிலையில் 10ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே தனது முதல் போட்டியில் மோதவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஏப்ரல் 9ல் துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இன்றைய தினம் அதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 9ம் தேதி ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளதாகவும் மே மாதம் 30ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 56 போட்டிகள்

மொத்தம் 56 போட்டிகள்

லீக் ஸ்டேஜில் மொத்தம் 56 போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் இதில் வெற்றி பெறும் அணிகள் ப்ளே-ஆப் சுற்றிற்கு தகுதி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சீசனில் ப்ளே -ஆப் சுற்றிற்கு தகுதி பெறாத சிஎஸ்கே அணி பங்கேற்கவுள்ள போட்டிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

டெல்லி கேபிடல்சுடன் மோதல்

டெல்லி கேபிடல்சுடன் மோதல்

வரும் 9ம் தேதி தொடர் துவங்கவுள்ள நிலையில் அடுத்த தினம் மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. தொடர்ந்து, ஏப்ரல் 16ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் 21ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்சுடனும் 25ம் தேதி ஆர்சிபியுடனும் மோதவுள்ளது.

14 போட்டிகளில் மோதல்

14 போட்டிகளில் மோதல்

இதுபோல இந்த தொடரின் லீக் சுற்றுகளில் 14 போட்டிகளில் பங்கேற்று சிஎஸ்கே விளையாடவுள்ளது. இந்த தொடரின் தேதிகள் குறித்த அறிவிப்பிற்கு முன்னதாகவே சிஎஸ்கே, தனது பயிற்சி போட்டிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதையொட்டி தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளனர். நாளையோ நாளை மறுதினமோ தங்களது பயிற்சி போட்டிகளை சிஎஸ்கே துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 8, 2021, 0:31 [IST]
Other articles published on Mar 8, 2021
English summary
CSK will play totally 14 games in the league in IPL 2021 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+