For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோல்வி நடுக்கத்தில் கோஹ்லி பேட்டிங்கை குறை கூறிய ஆன்டர்சன்.. பளார் பதிலடி கொடுத்த கோஹ்லி

By Veera Kumar

மும்பை: ஆடத்தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக இந்தியாவிடம் நன்கு வாங்கி கட்டி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதை சமாளிக்க பிட்ச் மீது குறை சொல்ல ஆரம்பித்துள்ளது.

இந்தியாவின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியின் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமாக கருத்து கூறியுள்ளார் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆன்டர்சன்.

ஆஷஷ் தொடர்களில் ஆஸ்திரேலிய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன்டர்சனால் இந்தியாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

முடியவில்லை

முடியவில்லை

அவரை 'வச்சி செய்து' வருகிறார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜெயந்த் யாதவை கூட சதம் அடிக்க விடாமல் தடுக்க முடியவில்லை ஆன்டர்சனால். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சில் அஸ்வினும், பேட்டிங்கில் விராட் கோஹ்லியும், இங்கிலாந்தால் ஜீரணித்து கொள்ள முடியாத திமிங்கிலங்களாக மாறிப்போயுள்ளனர்.

மைன்ட் கேம்

மைன்ட் கேம்

எனவே மைன்ட் கேம் ஆரம்பித்துள்ளனர் இங்கிலாந்து வீரர்கள். அதன் ஒரு பகுதியாகவே, நிருபர்களிடம் பேசிய ஆன்டர்சன், விராட் கோஹ்லி பேட்டிங் டெக்னிக்கை மேம்படுத்திக்கொள்ளவில்லை என கூறியிருந்தார். இங்கிலாந்து பிட்சுகளில் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முன்பு கோஹ்லி திணறியதாகவும் இப்போதும் அதைப்போலவேதான் உள்ளதாகவும் ஆனால் இந்திய பிட்சுகளில் வேகப்பந்து வீச்சு எடுபடவில்லை என்பதால் விராட் கோஹ்லி சிறப்பாக பேட் செய்ய முடிவதாகவும் அவர் கூறினார்.

கோஹ்லி மீது குறை சொன்னார்

கோஹ்லி மீது குறை சொன்னார்

இங்கிலாந்து பிட்சில் வேகப்பந்து வீச்சு ஸ்விங் மற்றும் இன்னமும் அதிக பவுன்சாக இருக்கும் என்றும், இந்திய பிட்சில் பந்து வேகம் குறைந்து செல்வதால், பேட்ஸ்மேன் தவறிழைக்க வாய்ப்பு குறைவு எனவும், கோஹ்லி ஸ்பின் பந்துகளில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்பதால் இந்திய பிட்சில் நன்கு ஆட முடிகிறது என்றும் ஆன்டர்சன் கூறினார்.

கோஹ்லி பதிலடி

கோஹ்லி பதிலடி

மும்பை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இந்தியாவிடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்த நிலையில், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோஹ்லி பேசுகையில், இந்திய அணி எப்போதுமே தோற்றால் அதை லகுவாக எடுத்துக்கொண்டு, வெற்றி பெற முயற்சிக்கும் அணி என்றும், தோல்விக்காக பிறரை குறை கூற காரணம் தேடுவதில்லை எனவும் பளார் என தெரிவித்தார்.

முதிர்ச்சி

முதிர்ச்சி

சும்மா உட்கார்ந்து கொண்டு எதிரணி வீரர்களின் டெக்னிக் குறித்து இந்திய வீரர்கள் கவலைப்படுவதில்லை எனவும், எங்களது பலம், பலவீனம் பற்றி மட்டுமே யோசித்து வருகிறோம் என்றும் கோஹ்லி முகத்தில் அறைந்தாற்போல தெரிவித்தார். நாங்கள் பலவீனமேயற்ற வீரர்கள் இல்லை என்றும், ஒவ்வொரு போட்டியிலும் திருத்தி நடந்து கொள்ளவே விரும்புவதாகவும் கோஹ்லி முதிர்ச்சியோடு கருத்தை தெரிவித்தார்.

Story first published: Monday, December 12, 2016, 16:12 [IST]
Other articles published on Dec 12, 2016
English summary
England paceman James Anderson had questioned India captain Virat Kohli's batting technique. And now the star batsman has replied to the comments without naming the fast bowler.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+