Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் டீம் முகத்தில் கரி பூசப்போகும் இந்தியா! மோக்கா.. மோக்கா ஹோலி ஸ்பெஷல்!

சென்னை: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்தியா ஹோலி கொண்டாடப்போகிறது என்பதைப்போல உள்ளது ஸ்டார் டிவி வெளியிட்டுள்ள மோக்கா.. மோக்கா விளம்பர வீடியோ.

உலக கோப்பையில் இந்தியா விளையாடும், போட்டிகள் தொடர்பாக ஒரு விளம்பர தொடரை வெளியிட்டு வருகிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ். உலக கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை என்பதை நக்கலடிப்பதற்காக, பட்டாசு வெடிக்க முடியாமல் அவஸ்தைப்படும் பாகிஸ்தான் ரசிகரை காண்பித்தது அந்த சேனல்.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

இதன்பிறகு தென் ஆப்பிரிக்காவுடன், இந்தியா வென்றதில்லை என்பதை காண்பிக்க அதே பட்டாசு பெட்டியை, இந்தியாவிடம் தென் ஆப்பிரிக்க ரசிகர் தருவது போல விளம்பரம் வெளியிட்டு இந்திய ரசிகர்களை கடுப்பேற்றியது.

யு.ஏ.இ அணியையும் விடவில்லை

யு.ஏ.இ அணியையும் விடவில்லை

இதனிடையே தென் ஆப்பிரிக்காவையும் இந்தியா வெற்றி கண்ட நிலையில், குட்டி அணியான யு.ஏ.இக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடந்த போட்டிக்கு முன்பாகவும், தென் ஆப்பிரிக்க ரசிகர், யு.ஏ.இ அணியின் சீருடையை அணிந்து கொண்டு அந்த அணிக்கு சப்போர்ட் செய்ய காத்திருப்பது போல ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.

புது விளம்பரம்

புது விளம்பரம்

இந்நிலையில், ஆடிய மூன்று போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றது. வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 6ம் தேதி, மேற்கிந்திய தீவுகளுடன் இந்தியா ஆட உள்ளது. இப்போட்டி குறித்தும் ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

மே.இ.தீவுகளுக்கு சப்போர்ட்

மே.இ.தீவுகளுக்கு சப்போர்ட்

அந்த வீடியோவில், யு.ஏ.இ சீருடை அணிந்த, தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் டிவியில் கிரிக்கெட் பார்க்கின்றனர். அப்போது, இந்தியா தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துவிட்டது என்று டிவி சேனலில் கமெண்டரி கேட்கிறது. இதனால் கடுப்பாகின்றனர் ரசிகர்கள். அப்போது அழைப்பு மணி கேட்கிறது. வெளியே சென்று பார்த்தால், கூரியரில் மேற்கிந்திய தீவுகளின் சீருடை வந்துள்ளது. அதை போட்டுக் கொண்டு மே.இ.தீவுகளுக்கு சப்போர்ட் செய்யலாம் என்று மகிழ்ச்சியடைகின்றனர் அந்த ரசிகர்கள்.

ஹோலி கொண்டாட்டம்

அப்போது மீண்டும் அழைப்பு மணி கேட்கிறது. வெளியே நிற்கும் ரசிகர், ஹோலி பொடியை கையில் கொடுத்துவிட்டு, அன்று ஹோலி பண்டிகை என்று சொல்லி மோக்கா.. மோக்கா என்று நடனமாடி கலாய்க்கிறார். மார்ச் 6ம்தேதி இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமர்சனமாக கொண்டாடப்படும். அன்று மேற்கிந்திய தீவுகளை இந்தியா வென்று ஹோலி கொண்டாட போகிறது என்பதை இந்த விளம்பரம் உணர்த்துவதாக உள்ளது. நீங்க கலக்குங்க பாஸ்...

Story first published: Monday, March 2, 2015, 13:25 [IST]
Other articles published on Mar 2, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+