
ஐபிஎல் ஏலம்
அதேபோல் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் இல்லாத 604 இந்திய வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற தங்களது பெயரை பதிவு செய்திருக்கிறார்கள். இதேபோன்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகாத 88 வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 57 வீரர்கள் தங்களின் பெயரை பதிவு செய்துள்ளார்.

ஒரு இந்தியர் கூட இல்லை
இந்த நிலையில் வீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அடிப்படை விலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் ரூ.2 கோடி அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்ட வீரர்களில், ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. அதேபோல் அடிப்படை விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்ட வீரர்களிலும் இந்திய வீரர்கள் இடம்பெறவில்லை. மாறாக ரூ.1 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட வீரர்களில் அதிகளவில் இந்தியாவின் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மயங்க் அகர்வால் அடிப்படை விலை
கடந்த சீசனில் பஞ்சாப் அணியால் தக்கவைக்கப்பட்ட வீரரும், கேப்டனுமான மயங்க் அகர்வால், அந்த அணியால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை, ஹைதராபாத் அணிகளுக்காக ஆடிய கேதார் ஜாதவ் அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் லக்னோ அணியால் விடுவிக்கப்பட்ட மனீஷ் பாண்டேவின் விலையும் ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரஹானே, இஷாந்த் ஷர்மா
இதேபோல் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக மோசமாக விளையாடிய ரஹானே விடுவிக்கப்பட்டிருந்தார். அவரின் அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவரை கடந்த சீசனில் கொல்கத்தா அணி ரூ.1 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. இதேபோல் கடந்த ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படாத இஷாந்த் ஷர்மா ஏலத்தில் பெயர் கொடுத்துள்ளார்.

உனாத்கட் அடிப்படை விலை
இஷாந்த் ஷர்மாவின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ஒருவரான உனாத்கட் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டார். இவரை மும்பை அணி கடந்த ஏலத்தில் ரூ.1.3 கோடிக்கு வாங்கிய நிலையில், தற்போது ரூ.50 லட்சம் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.