உலகின் 2வது பணக்கார கிரிக்கெட் வீரர்.. ஓய்ந்தாலும் "பாய்ச்சல்" குறையல - எக்கச்சக்க வருமானம்
மும்பை: உலகின் இரண்டாவது பணக்கார கிரிக்கெட் வீரர் யார்? உங்கள் கெஸ்ஸிங் என்ன? கரெக்ட்டா சொல்லுங்க பார்ப்போம்.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்பஸ் (Forbes) அமெரிக்க வணிக பத்திரிகை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் யார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடியும். அதன்படி, உலகின் டாப் 10 பணக்கார விளையாட்டு வீரர்கள் அடங்கிய பட்டியலை ஃபோர்ப்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.
விளையாட்டு ஊதியம், விளம்பரம், சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கி இந்த லிஸ்ட் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக, 'Forbes' எனும் பிராண்டில் தங்கள் பெயர் வருவதையே விளையாட்டு வீரர்கள் பெருமையாக எண்ணுவார்கள்.

டாப் லிஸ்டில்
2021 ஆண்டுக்கான டாப் 10 பணக்காரர் விளையாட்டு வீரர்கள் பட்டியலில், கலப்பு தற்காப்பு கலை வீரர் Conor McGregor 180 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதலிடம் பிடித்திருந்தார். கடந்தாண்டு டாப் லிஸ்டில் இருந்த ரொனால்டோ, மெஸ்ஸி, ஃபெடரர் என அனைவரையும் பின்னுக்கு தள்ளி, முதன் முதலாக முதலிடம் பிடித்தார் McGregor. இராண்டாம் இடத்தை பிடித்தது லயோனல் மெஸ்ஸி. வருமானம் 130 மில்லியன் டாலர். சரியாக McGregor-ஐ விட 50 மில்லியன் டாலர் குறைவு. மூன்றாம் இடத்தில் கிறிஸ்டியானால் ரொனால்டோ இருக்கிறார். இவரது வருமானம் 120 மில்லியன் டாலர்.

2வது இடத்தில் யார்?
அதெல்லாம் சரி.. கிரிக்கெட்டில் யார் டாப் என்பதே நம்மூர் ரசிகர்களின் கேள்வி. இதற்கு பதில், தி கிரேட் 'சச்சின் டெண்டுல்கர்' என்று கடந்த வாரம் நமது தளத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தார். Sportingfree.comன் அறிக்கையின் படி, சச்சின் தான் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர். இவரின் சொத்து மதிப்பு ரூ.1090 கோடி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னும் பல பிராண்ட்கள் மூலமும், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார்.

ஏற்கனவே ஓய்வு
இந்த வாரம், உலகின் 2வது பணக்கார கிரிக்கெட் வீரர் என்று பார்க்கலாம். Sportingfree.com ரிப்போர்ட் படி, இரண்டாம் இடத்தில் இருப்பவர் 'தல' தோனி தான். இவரது சொத்து மதிப்பு ரூ.767 கோடி. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டாலும், சென்ற ஆண்டு தான் சர்வதேச லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டிலும் இருந்து தோனி ஓய்வு பெற்றார்.

சச்சினுக்கு இணையாக
எனினும், ஐபிஎல் கிரிக்கெட்டில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருவதால் விளம்பரம், ஸ்பான்சர்ஸ், பல சர்வதேச, லோக்கல் பிராண்ட்களின் தூதர் என்று இவரது வருமான பேக்கேஜ் வேற லெவலில் உள்ளது. இன்னமும், கிரேஸ் குறையாத தோனிக்கு, உலகம் முழுவதும் சச்சினுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.


Click it and Unblock the Notifications