Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

JCB உடன் மோது, RCB உடன் மோதாதே.. அந்த வேதனை இருக்கே.. பாவம் நம்ம பெங்களூரு ஃபேன்ஸ்

பெங்களூரு : ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடியது என்றால், அடுத்த நாள் சமூக வலைத்தள பக்கமே போக முடியாது. அந்த அளவுக்கு மீம்ஸ்கள் கொட்டி கிடக்கும். மீம்சை உங்களால் தேடி தேடி கண்டுபிடிக்க முடியாது என்பதால், நாங்களே உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம்.

ஆர்சிபி அணி எப்போதுமே சிறப்பாக விளையாடினாலும், மற்ற அணி ரசிகர்கள் அவர்களை காமெடியாக தான் பார்ப்பார்கள். அந்த வகையில், நேற்று கூட 213 ரன்கள் என்ற இலக்கை எட்ட லக்னோ முயற்சித்த போது 23 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. இந்த நிலைமையில் இருந்தும், அடிக்காவிட்டால் பெங்களூரு அணியை என்ன வென்று சொல்வது. இதை தான் ஆர்சிபி என்பது ஒரு அணியே இல்ல, அதுவே ஒரு மீம் தான் என்று பதவிட்டுள்ளார்கள் நெட்டிசன்கள்.

Memes Fest by Netizens after RCB Lost the match against lucknow

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியும், அவர்களது சொந்த மைதானத்தில் பலமாக இருக்கும். இதனால் மற்ற அணிகள் விளையாடும் போது , மண்ணின் மைந்தர்களை எதிர்கொள்ள கடினமாக இருக்கும். சிஎஸ்கே சொந்த மண்ணில் 21 போட்டிகளில் கடைசியாக விளையாடி 19 ஆட்டங்களில் வென்று இருக்கிறது. ஆனால், பெங்களூரு அணி தான் தங்களது சொந்த மண்ணில் கூட விருந்தோம்பல் உணர்வுடன் நடந்து கொள்வார்கள். இதனை தான் போக்கிரி படத்தின் சீசனை மீம்சாக போட்டுள்ளனர்.

Memes Fest by Netizens after RCB Lost the match against lucknow

ஆர்சிபி அணி ரசிகர்கள் எப்போதுமே முதலில் வாய் பேசிவிட்டு, பிறகு அடி வாங்குவது கை வந்த கலை. பழகுவதற்கு அப்படியே நம்ம வங்கதேச ரசிகர்கள் போல் நடந்து கொள்வார்கள். ஆனால், ஜெர்சி மட்டும் தான் வேறு. ரசிகர் ஒருவர் JCB உடன் கூட மோது, ஆர்சிபி உடன் மோதாதே என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால் போட்டி முடிந்த உடன் அவரை பார்த்து அனைவரும் சிரிப்பது போல் மீம்ஸ் போட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

Memes Fest by Netizens after RCB Lost the match against lucknow

ஆர்சிபி அணி தொடர்ந்து வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் தோற்பதும், இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாமல் இருப்பதும் என தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் ஆர்சிபி அணி தந்துள்ளது. இதனால் ஆர்சிபி ரசிகராக இருப்பது அவ்வளவு கடினம் என்பதை விளக்கும் விதமாக அந்த வேதனை இருக்கே வேதனை என்று கிண்டல் செய்துள்ளார்கள் நெட்டிசன்கள்.

Memes Fest by Netizens after RCB Lost the match against lucknow

இதே போன்று ஆர்சிபி அணிக்கு எதிராக கடைசி பந்தில் பேட்டில் படாமலேயே ஓடி ஆவேஷ் கான் வெற்றி பெற வைத்தார். ஆனால் எதோ பேட்ஸ்மேன் போல் கொண்டாடி தற்போது அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கிண்டல் செய்யும் விதமாக, சரத்குமாரை பார்த்து வடிவேலு சொல்வது போல், என்னை எல்லாரும் கராத்தே மாஸ்டர்னு நினைக்கிறாங்க. ஆனால் நீ ஒரு புரோட்டா மாஸ்டர்னு எனக்கு மட்டும் தான் தெரியும் என்று பதிவிட்டுள்ளனர்.

Memes Fest by Netizens after RCB Lost the match against lucknow
Story first published: Tuesday, April 11, 2023, 12:21 [IST]
Other articles published on Apr 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+