Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலிடத்தை விட்டுக் கொடுக்காத கேப்டன்... ஐசிசி ஒருநாள் போட்டிகளோட தரவரிசையில் முதலிடம்!

டெல்லி : ஐசிசி ஒருநாள் போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் ரோகித் சர்மா 842 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

ஐசிசி தரவரிசை

ஐசிசி தரவரிசை

ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி 870 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஒரு ஆண்டாக ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும் 2வது இடத்தில் 842 புள்ளிகளுடன் உள்ளார்.

ஜஸ்பிரீத் பும்ரா 3வது இடம்

ஜஸ்பிரீத் பும்ரா 3வது இடம்

3வது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும், 4வது மற்றும் 5வது இடங்களில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் பின்ச்சும் இடம்பெற்றுள்ளனர். இதேபோல பௌலர்கள் தரவரிசையில் ஜஸ்பிரீத் பும்ரா 700 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்துள்ளார். டிரெண்ட் போல்ட் முதலிடத்தில் 722 புள்ளிகளுடன் உள்ளார்.

8வது இடத்தில் ஜடேஜா

8வது இடத்தில் ஜடேஜா

இதனிடையே இந்த தரவரிசையின் ஆல்-ரவுண்டர் வரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 253 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்திய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இவரது ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் இவர் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளார்.

வங்கதேச வீரர் முதலிடம்

வங்கதேச வீரர் முதலிடம்

ஆல்-ரவுண்டர் வரிசையில், 420 புள்ளிகளுடன் வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் முதலிடத்தையும் ஆப்கானிஸ்தானின் முகமது நபி இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இங்கிலாந்தின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4வது இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, January 27, 2021, 23:48 [IST]
Other articles published on Jan 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+