Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடிச்சான் பாரு ஆர்டர்.. ஆடவர் ஐபிஎலுக்கும் 3.1.1 விதி அமல்.. இனி சிக்கல் இல்லை

மும்பை : ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய பிரச்சினையே நடுவர்கள் கொடுக்கும் தவறான முடிவுகள் தான்.இதன் மூலம் பல்வேறு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

குறிப்பாக சில அணிகளுக்கு சாதகமாக நடுவர்கள் செயல்படுவதாக ரசிகர்கள் பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்து வருவார்கள்.

நடுவர்கள் தவறான முடிவை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் விதியை பயன்படுத்தி வீரர்கள் அவுட்டா இல்லை நாட் அவுட்டா என்று பார்க்கும் நடைமுறை ஏற்கனவே ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Mens IPL DRS Rule updated by BCCI Officials - Report

இந்த நிலையில் மகளிர் ஐ பி எல் சிறப்பாக செயல்பட்டு வரும் விதி 3.1.1 ஆடவர் கிரிக்கெட்டிலும் செயல்படுத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி கேப்டன்களோ அல்லது வீரர்களும் பந்து அல்லது நோ பால் கேட்டு நடுவரிடம் முறையீடு செய்யலாம். உதாரணத்திற்கு கடைசி ஓவரில் மூன்று பந்துகளுக்கு பத்து ரன்கள் தேவைப்படும், நிலையில் பந்துவீச்சாளர் ஓயிடோ அல்லது உயரமாக நோபால் போட்டாரோ அதனை நடுவர் கண்டுகொள்ளாத நிலையில் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் டி ஆர் எஸ் முடிவை பயன்படுத்தி நடுவரிடம் மேல் முறையீடு செய்யலாம்.

இதேபோன்று களத்தில் நிற்கும் கேப்டனும் வைடு அல்லது நோ பால் ஆகியவற்றை நடுவர் தவறாக கொடுத்தாலும் அதனை டி ஆர் எஸ் பயன்படுத்தி மேல் முறையீடு செய்யலாம். ஒரு வேலை நடுவர் சொன்னது தான் சரி என டி ஆர் எஸ் முடிவில் தெரிய வந்தால் இனி அந்த வாய்ப்பை வீரர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

இதன் மூலம் பெரிய பெரிய தவறுகள் தடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் ஆட்டத்தை சரியான முறையில் நடத்த தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது என இந்த முடிவை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Story first published: Monday, March 6, 2023, 22:41 [IST]
Other articles published on Mar 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+