தந்தை மெஸ்ஸி விருது வாங்கிய போது.. செமயாக குறும்பு செய்த 4 வயது மேட்டியோ.. வைரலான கியூட் வீடியோ!
பாரிஸ் : நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரருக்கு பிரான்ஸ் சார்பாக வருடா வருடம் வழங்கப்படும் பலோன் டிஆர் விருதை வென்றார்.
அவர் விருது வாங்க மேடை ஏறிய போது அவரது நான்கு வயது மகன் மேட்டியோ செய்த குறும்பு வீடியோ இணையத்தை தெறிக்கவிட்டு, கால்பந்து ரசிகர்கள் இடையே காட்டுத்தீயாக பரவி வருகிறது.

பலோன் டி ஆர் விருது
2019 ஆண்டுக்கான பலோன் டி ஆர் விருது இந்த முறை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. பலோன் டிஆர் சிறந்த வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி முதல் இடத்தை பிடித்து இந்த விருதை வென்றார்.

அதிக முறை வென்றார்
ஆறாவது முறையாக இந்த விருதை வென்று, அதிக முறை இந்த விருதை வெல்லும் வீரர் என்ற சாதனையை செய்தார் மெஸ்ஸி. ரொனால்டோ இதுவரை ஐந்து முறை இந்த விருதை வென்றுள்ளார்.

மூன்றாம் இடத்தில் ரொனால்டோ
இறுதியாக 2015ஆம் ஆண்டு இந்த விருதை வென்ற மெஸ்ஸி நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் பலோன் டி ஆர் வென்றார். ரொனால்டோ இந்த முறை மூன்றாம் இடத்தை மட்டுமே பிடித்தார்.

விர்ஜில் வான் டிஜிக்
இந்த முறை இரண்டாம் இடத்தை நெதர்லாந்தை சேர்ந்த லிவர்பூல் அணி வீரர் விர்ஜில் வான் டிஜிக் பிடித்தார். அவர் தன் உறவினர் சிறுவனை தன்னுடன் இந்த விருது வழங்கும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தார்.

இளைய மகன் மேட்டியோ
மெஸ்ஸி தன் மனைவி மற்றும் இரண்டு இளைய மகன்களை அழைத்து வந்திருந்தார். அதில் கடைக்குட்டி தான் மேட்டியோ. நான்கு வயதாகும் மேட்டியோ, விர்ஜில்-இன் உறவினர் சிறுவனுக்கு அருகே அமர்ந்து இருந்தார்.

மேட்டியோ கொண்டாட்டம்
மெஸ்ஸி விருது வாங்க மேடை ஏறிய போது, மேட்டியோ தன் அருகே இருந்த இரண்டாம் இடம் பிடித்த விர்ஜில்-இன் உறவினர் சிறுவன் மீது தட்டி, தட்டி, சிரித்து தன் தந்தை விருது வாங்கியதை கொண்டாடினார்.

38 லட்சம்
அந்த வீடியோ ட்விட்டரில் மட்டும் 38 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது. மேட்டியோ எப்போதும் தன்னை கலாய்க்கும் வகையில் எதிரணிகளுக்கு தான் ஆதரவு அளிப்பார் என மெஸ்ஸியே கூறி இருக்கிறார்.
குறும்பு செய்தார்
இந்த நிலையில், விருது வழங்கும் விழாவில் இரண்டாம் இடம் பிடித்த விர்ஜிலை கலாய்க்கும் வகையில் அவர் இப்படி குறும்பு செய்தாரா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும், அவரது குறும்பு கால்பந்து ரசிகர்கள் இடையே பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications