Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜஸ்ட் 1 ரன்னில் "கப்"பைப் பிடித்த முதல் அணி... மும்பை!

ஹைதராபாத்: ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக சொற்ப ரன் வித்தியாசத்தில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் பெற்றுள்ளது.

இன்று ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில், தப்பிப் பிழைத்து புனே அணியை வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி.

MI becomes the first team to win IPL championship by just one run

கடைசிப் பந்து வரை பெரும் பரபரப்புடன் நடந்த இப்போட்டியில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இதுதான் மிகக் குறைந்த வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை ஒரு அணி வென்ற இறுதிப் போட்டியாகும். இதற்கு முன்பு நடந்த இறுதிப் போட்டிகளின் முடிவுகள் விவரம்:

2008 இறுதிப் போட்டி - 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது.
2009 இறுதிப் போட்டி- 6 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
2010 இறுதிப் போட்டி - 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸை வீ்ழ்த்தியது.
2011 இறுதிப் போட்டி - 34 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
2012 இறுதிப் போட்டி - 36 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
2013 இறுதிப் போட்டி - 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
2014 இறுதிப் போட்டி - 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது.
2015 இறுதிப் போட்டி - 41 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது.
2016 இறுதிப் போட்டி - 8 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
2017 இறுதிப் போட்டி - 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி புனே அணியை வீழ்த்தியது.

Story first published: Monday, May 22, 2017, 0:05 [IST]
Other articles published on May 22, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+