Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021: மும்பையின் செம ஸ்டிராடஜி... 3 கோடி லாபம்... கில்லாடிங்கப்பா

சென்னை: ஆஸ்திரேலிய பவுலிங் ஆல் ரவுண்டர் நாதன் கோல்டர் நைல்-ஐ மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியுள்ளது.

ஐபிஎல் ஏலம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு அணியும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கி வருகின்றன.

மேக்ஸ்வெல்லை 14.25 கோடி தொகைக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுக்க, 16.25 கோடிக்கு க்றிஸ் மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது. சென்னை அணி இங்கிலாந்தின் மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

நாதன் கோல்டர் நைல்

நாதன் கோல்டர் நைல்

இந்நிலையில், ஆஸ்திரேலிய பவுலிங் ஆல் ரவுண்டர் நாதன் கோல்டர் நைல்-ஐ மும்பை இந்தியன்ஸ் மீண்டும் வாங்கியுள்ளது. 2013ம் சீசனில், ஐபிஎல் ஏலத்தில் நுழைந்த கோல்டர் நைல், டெல்லி, கொல்கத்தா பெங்களூரு போன்ற அணிகளில் விளையாடி, கடந்த ஆண்டு மும்பை அணிக்குள் நுழைந்தார்.

5 கோடிக்கு ஏலம்

5 கோடிக்கு ஏலம்

ஆனால், இந்த சீசனுக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அவரை ரிலீஸ் செய்ய, மற்ற அணிகள் அவரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியே #OneFamily எனும் அவர்களது ஹேஷ்டேக் படி மீண்டும் அவரை வாங்கியுள்ளது. 5 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

3 கோடி மிச்சம்

3 கோடி மிச்சம்

ஆனால், உண்மையில் மும்பை செம ஸ்டிராடஜியை கையாண்டுள்ளது. போன 2020 சீசனில் இவரை எட்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்த மும்பை, இந்தாண்டு ரிலீஸ் செய்து தற்போது 5 கோடிக்கு எடுத்து, 3 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.

பவுலிங் ஆல் ரவுண்டர்

பவுலிங் ஆல் ரவுண்டர்

மீண்டும் இவரைக் கைப்பற்றி இருப்பதன் மூலம், மலிங்கா இல்லாத குறையை ஓரளவுக்கு சரி செய்துள்ளது மும்பை. தவிர இவர் பவுலிங் ஆல் ரவுண்டர் என்பதால், லோ ஆர்டரில் இவரது பேட்டிங்கும் மும்பைக்கு கைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Thursday, February 18, 2021, 18:18 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+