Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முரட்டு வீரர்களை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்.. பிராவோவை தட்டி தூக்கியது.. மிரட்டலான அணி ரெடி

மும்பை: ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமான அணியாக விளங்கும் வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது யுஏஇ யில் நடைபெறும் டி20 தொடரில் அபுதாபி அணியை வாங்கியது.

இதற்கு எம்.ஐ. எமிரேட்ஸ் என்று பெயர் வைத்துள்ள அம்பானி, அந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களையும் ஒப்பந்தம் செய்து தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன் படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய முன்னாள், இந்நாள் வீரர்களை நிர்வாகிகள் தட்டி தூக்கியுள்ளனர்.

பொலார்ட்

பொலார்ட்

இதில், மும்பை அணிக்காக தொடக்கத்தில் இருந்தே விளையாடி வரும் பொலார்டை முதல் வீரராக எம்.ஐ. எமிரேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இதே போன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர விரரும், முன்னாள் மும்பை வீரருமான பொலார்ட் தற்போது எம்.ஐ. எமிரேட்ஸ் அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளார்.

இம்ரான் தாஹிர்

இம்ரான் தாஹிர்

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பொலார்டும் தற்போது எமிரேட்ஸ் அணியில் இணைந்திருக்கிறார். நியூசிலாந்து வீரரும் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான டிரெண்ட் பௌவுல்ட், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஆண்டிரு பிளேட்சர், சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிரை எம்.ஐ. எமிரேட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

பலமான அணி

பலமான அணி

இங்கிலாந்து வீரர் சமித் பட்டேல், தி ஹேண்டரட் தொடரில் முதல் முறையாக சதம் விளாசிய இங்கிலாந்து வீரர் வில் ஸ்மீட்,இங்கிலாந்த வீரர் ஜார்டன் தாம்ப்சனும் எமிரேட்ஸ் அணிக்காக விளையாட உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா சார்டன்,ஜாஹிர் கான்,ஃபசல்ஹக் ஆகிய வீரர்களை எமிரேட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.

ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

இதே போன்றுநெதர்லாந்தை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் பாஸ் டே லீட், ஸ்காட்லாந்து வீரர் பிராட்லி ஆகியோரை எம்.ஐ. எமிரேட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. மொத்தம் இதுவரை 14 வீரர்களை தேர்வு செய்துள்ள எம்.ஐ. எமிரேட்ஸ் அணி, உள்ளூர் வீரர்கள் சிலரையும் ஒப்பந்தம் செய்ய உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நீத்தா அம்பானி, மும்பை அணியின் குடும்பத்தில் புதிதாக சேரும் வீரர்களை வரவேற்பதாக கூறியுள்ளார்.

Story first published: Friday, August 12, 2022, 19:40 [IST]
Other articles published on Aug 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+