Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் மெகா சாதனை.. 10வது டி20 கோப்பை வெற்றி... நிக்கோலஸ் பூரன் சிக்ஸர் மழை

துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணி தனது பத்தாவது டி20 கோப்பை வென்று பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் முகமது வாசிம் 43, குசால் பெரேரா 38, அடுத்து வந்த ஆண்ட்ரே ஃபிளட்சர் 53, நிக்கோலஸ் பூரன் 57 ரன்கள் குவிக்கவே அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.

mi-emirates-vs-dubai-capitals-final-ilt20-nicholas-pooran-leads-mi-won-10th-t20-trophy

இதில் நிக்கோலஸ் பூரன் ஆட்டம் தான் திருப்புமுனையாக அமைந்தது. அவர் 6 சிக்ஸ், 2 ஃபோர் அடித்து 27 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். 209 ரன்கள் என்ற கடின இலக்குடன் துபாய் கேபிடல்ஸ் அணி சேஸிங் செய்ய வந்தது. அந்த அணியை சேர்ந்த டாம் பான்டன் 35, சாம் பில்லிங்க்ஸ் 40, ஜேசன் ஹோல்டர் 24 ரன்கள் எடுத்த போதும் எந்த வீரராலும் நிக்கோலஸ் பூரன் போல 200 ஸ்ட்ரைக் ரேட்டை கடந்து ரன் குவிக்க முடியவில்லை.

சில பேட்ஸ்மேன்களால் 100 ஸ்ட்ரைக் ரேட்டையே தாண்ட முடியவில்லை. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது மும்பை எமிரேட்ஸ் அணி.

இது மும்பை இந்தியன்ஸ் அணியின் பத்தாவது டி20 கோப்பை ஆகும். இதற்கு முன் அந்த அணி 2011 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்றது. 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. 2023இல் மகளிர் ஐபிஎல் கோப்பை வென்றது. 2023இல் அமெரிக்க டி20 தொடரான எம்எல்சி கோப்பை வென்றது. தற்போது 2024 இண்டர்நேஷனல் லீக் டி20 கோப்பை வென்றுள்ளது. செல்லும் இடமெல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி தன் முத்திரையை பதித்து வருகிறது.

Story first published: Sunday, February 18, 2024, 8:11 [IST]
Other articles published on Feb 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+