மும்பை: ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் மும்பை அணி 9 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது. அதன்படி சத்யநாராயண ராஜு, ரீஸ் டாப்லி, கேஎல் ஸ்ரீஜித், கரண் சர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், பெவன் ஜேக்கப்ஸ், முஜீப் உர் ரஹ்மான், லிசார்ட் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர் உள்ளிட்ட வீரர்களை விடுவித்துள்ளது. இதனால் மும்பை அணி கைகளில் ரூ.2.75 கோடி மட்டுமே கையில் வைத்துள்ளது. இதனால் மும்பை அணி சில இளம் வீரர்களை மட்டுமே வாங்க ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கேற்கலாம்.
2026ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலம் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடக்க உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு அணிகளும் தங்கள் அணியால் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் மற்றும் ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மும்பை அணி இந்த முறை மொத்தமாக 9 வீரர்களை விடுவித்துள்ளது.

மும்பை அணியை பொறுத்தவரை சத்யநாராயண ராஜு, ரீஸ் டாப்லி, கேஎல் ஸ்ரீஜித், கரண் சர்மா, அர்ஜுன் டெண்டுல்கர், பெவன் ஜேக்கப்ஸ், முஜீப் உர் ரஹ்மான், லிசார்ட் வில்லியம்ஸ், விக்னேஷ் புத்தூர் உள்ளிட்ட வீரர்களை விடுவித்துள்ளது. ஏற்கனவே ஷர்துல் தாக்கூர், ஷெர்ஃபானே ரூதர்ஃபோர்டு மற்றும் மயங்க் மார்க்கண்டே ஆகியோரை டிரேட் மூலமாக வாங்கிவிட்டது.
இதனால் மும்பை அணி கைகளில் வெறும் ரூ.2.75 கோடி மட்டுமே உள்ளது. இதனால் ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணியின் உரிமையாளர்கள் பெரிதாக பணியாற்ற தேவையில்லை. இளம் வீரர்களை மட்டுமே வாங்கினால் போதுமானது. அந்த வகையில் மும்பை அணி ஜாலியாக அமர்ந்து மிக்சர் சாப்பிடலாம்.
ரீடெய்ன் செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்: ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பும்ரா, நமன் திர், வில் ஜாக்ஸ், ரிக்கல்டன், மிட்சல் சாண்ட்னர். கார்பின் பாஸ்ச், ராஜ் பாவா, போல்ட், தீபக் சஹர், அஸ்வனி குமார், ரகு சர்மா, அல்லா கசன்ஃபர், ராபின் மின்ஸ்