Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK: “கடைசி 2 இடத்துல இருக்கலாம்னு சொன்னீங்களே, சொன்னீங்களே சாரு” தெறிக்கவிட்ட ஐபிஎல் மீம்ஸ்

டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றது. அதன் மூலம் அந்த அணி புள்ளிப் பட்டியலில் ஏழாவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது. இதை வைத்து பல்வேறு மீம்ஸ்களும் வெளியாகியுள்ளன. நேற்று பெற்ற வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒன்பதாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர். அதை சுட்டிக்காட்டி 'மேலே ஏறி வாரோம், ஒதுங்கி நில்லு' என அவர்கள் சொல்வது போலவும், அதற்கு எது ஏழாவது இடமா' என வடிவேலு கேட்பது போலவும் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

MI Victory Over DC Sparks Hilarious Memes and Social Media Reactions in IPL 2025

மும்பை இந்தியன்ஸ் தற்போது ஏழாவது இடத்துக்கு சென்று விட்டதால், அந்த அணியுடன் ஜோடி போட்டு கடைசி இரண்டு இடத்தில் இருக்கலாம் என ஆசைப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இப்போது வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு, "கடைசி 2 இடத்துல இருக்கலாம்னு சொன்னீங்களே, சொன்னீங்களே சாரு" என அழுவது போல ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில், 19-வது ஓவரில் வரிசையாக மூன்று ரன் அவுட் ஆகி ஆல் அவுட் ஆனது. இதில் பல ரசிகர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி வேண்டுமென்று ரன் அவுட் ஆனதாக பலரும் சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகின்றனர். அதை வைத்து 'வீட்ல ஏதும் காசு பிரச்சனையா?' என டெல்லி கேப்பிடல்ஸை பார்த்து சிஎஸ்கே கேள்வி கேட்பது போல மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

MI Victory Over DC Sparks Hilarious Memes and Social Media Reactions in IPL 2025

சிஎஸ்கே ரசிகர்களும் ஆர்சிபி ரசிகர்களும் எப்போதும் சண்டையிட்டு வரும் நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று இருப்பதால் அந்த அணியும் கோதாவில் குதித்து இருப்பதாக விசுவாசம் படத்தில் அஜித் குமார் என்ட்ரி கொடுக்கும் காட்சியை வைத்து, "தூக்குதுரை வந்துட்டாரு" என மீம் போட்டுள்ளனர்.

நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 119 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன் பின் பார்த்தால், 193 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆகிவிட்டது. அதை சுட்டிக்காட்டி 'கட்டதுரை' ஆவேசமாக செல்வது போலவும், அதன் பின் சட்டை எல்லாம் கிழிந்து நடந்து வருவது போலவும் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

ரோஹித் சர்மா தொடர்ந்து 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இருக்கிறார். இதை வைத்து ஹர்திக் பாண்டியா அவரைப் பார்த்து 'ஆமா நீ யாருடைய டீம்?' என கேள்வி கேட்பது போல ஒரு மீம் வெளியிட்டு இருக்கின்றனர்.

Story first published: Monday, April 14, 2025, 14:33 [IST]
Other articles published on Apr 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+