Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்க 2 பேருமே சரியில்லை.. சென்னை அணிக்கு தலைவலியாக மாறி வரும் அம்பதி ராயுடு - வாட்சன்!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு மோசமான துவக்கம் அளித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து, இந்த சீசனில் தன் முதல் தோல்வியை பதிவு செய்தது. ராயுடு - வாட்சன் இந்தத் தோல்விக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்தனர்.

துவக்கம் சொதப்பல்

துவக்கம் சொதப்பல்

மும்பை நிர்ணயித்த 171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும், வாட்சன் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்து வெளியேறும் போது சென்னை 6 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தவித்து வந்தது.

மிடில் ஆர்டரில் அழுத்தம்

மிடில் ஆர்டரில் அழுத்தம்

இதனால், மிடில் ஆர்டர் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட அவர்கள் விக்கெட் விழாமல் இருக்க நிதான ஆட்டம் ஆடினர். அதனால், மேலும் ரன் ரேட் வீழ்ந்து சென்னை அணி 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

தலைவலி

தலைவலி

அம்பதி ராயுடு, வாட்சன் இருவரும் சென்னை அணிக்கு புதிய தலைவலியாக மாறி வருகிறார்கள். இவர்கள் ஆடிய நான்கு போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே ஓரளவு ரன்கள் எடுத்தனர். மற்ற மூன்று போட்டிகளிலும் அணியை கை விட்டுள்ளனர். வாட்சன் நான்கு போட்டிகளில் 0, 44, 13, 5 ரன்கள் எடுத்துள்ளார். ராயுடு நான்கு போட்டிகளில் 28, 5, 1, 0 ரன்கள் எடுத்துள்ளார்.

சிக்கல்

சிக்கல்

இவர்கள் இருவரும் அடுத்த போட்டிகளில் சுதாரிக்காவிட்டால் சென்னை அணிக்கு கடும் சிக்கல் ஏற்படும். ஏற்கனவே, வேகப் பந்துவீச்சில் சரியான வீரர்கள் இன்றி தவித்து வரும் சென்னை அணிக்கு துவக்க வீரர்களும் பிரச்சனையாக மாறாமல் இருந்தால் தான் தொடர்ந்து வெற்றி பெற முடியும்.

Story first published: Thursday, April 4, 2019, 13:17 [IST]
Other articles published on Apr 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+