Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதனால் தான் சிஎஸ்கே வெற்றியை குவிச்சுக்கிட்டு இருக்கு.. ரகசியத்தை போட்டு உடைத்த ஸ்டீபன் பிளெம்மிங்!

Recommended Video

சென்னையோட வெற்றிக்கு பிளெம்மிங் சொல்லும் காரணம்

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சீசனின் சாம்பியன் அணியான சென்னை, அதே வேகத்தில் இந்த ஆண்டும் செயல்பட்டு வருவது பலரது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இது எப்படி சாத்தியம்? சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் இது குறித்த ரகசியத்தை கூறினார்.

அதே அணி

அதே அணி

அவர் கூறியது இது தான். சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனின் பைனலில் ஆடிய அதே அணியில் சில மாற்றங்கள் மட்டுமே செய்து, இந்த ஆண்டு முதல் போட்டியில் ஆட வைத்தது.

அதிக மாற்றமில்லை

அதிக மாற்றமில்லை

அடுத்து வந்த போட்டிகளிலும் அணியில் பெரிய மாற்றமின்றி, ஒரே வீரர்களை பயன்படுத்தியது சென்னை அணி. இந்த திட்டத்தால், ஒவ்வொரு வீரரும் அணியில் தன் பங்கு என்ன என தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார்கள் என்கிறார் பிளெம்மிங்.

முன்னணியில் சென்னை

முன்னணியில் சென்னை

சென்னை அணி எப்படி எந்த குழப்பமும் இன்றி இருக்கிறது என்ற ரகசியத்தையும் கூறினார் பிளெம்மிங். கடந்த சீசனில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியதால் மற்ற அணிகளை விட சென்னை அணி முன்னணியில் இருக்கிறது என்றார். மற்ற அணிகள் தங்களின் புதிய வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவே சில காலம் எடுத்துக் கொள்வார்கள் என்பதே உண்மை.

வயதான அணியா?

வயதான அணியா?

அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் வயதான அணி என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்த பிளெம்மிங், "என்னைப் பொறுத்தவரை எங்கள் அணி 12 மாதங்கள் சாமர்த்தியத்தை வளர்த்துக் கொண்டுள்ளது" என வயதை - சாமர்த்தியத்துக்கு ஈடாக்கிக் கூறினார்.

கோப்பை வெல்லுமா?

கோப்பை வெல்லுமா?

ஆக மொத்தத்தில், பிளெம்மிங் சொல்வதை பார்த்தால், சென்னை அணி தன் திட்டத்தில் மற்ற அணிகளை விட தெளிவாக இருப்பதாகவே தெரிகிறது. மற்ற அணிகளை பின் தள்ளி சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஆண்டும் எளிதாக கோப்பை வெல்லுமா?

Story first published: Wednesday, April 3, 2019, 13:08 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+