Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அங்கேயும் நாங்க தான்.. எங்கேயும் நாங்க தான்.. ட்விட்டரில் கெத்து காட்டும் சிஎஸ்கே & தோனி!

Recommended Video

சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலக்கி வருகிறது. தான் ஆடிய முதல் மூன்று போட்டிகளை வென்று அசத்தியுள்ளது அந்த அணி.

அது மட்டுமில்லாமல், சமூக வலைதளங்களிலும் சென்னை அணி தான் கலக்கி வருகிறது. அதற்கு சாட்சியாக ட்விட்டர் சமூக வலைதளம் வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது.

சிஎஸ்கே கெத்து

சிஎஸ்கே கெத்து

ட்விட்டர் இந்தியா கடந்த வாரம் ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட, விரும்பப்பட்ட கணக்குகள், பதிவுகள், பெயர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி மார்ச் 23 முதல் மார்ச் 31 வரை ட்விட்டரில் அதிக முறை பயன்படுத்தப்பட்ட அணியின் பெயர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கணக்கான @ChennaiIPL ஆகும்.

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இடங்களில் யார்?

அடுத்த இரண்டு இடங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன. சென்னை அணி முதல் இடத்தில் உள்ளது.

வீரர்களில் முதல் இடத்தில் யார்?

வீரர்களில் முதல் இடத்தில் யார்?

வீரர்கள் வரிசையில் அதிகம் பயன்படுத்தப்பட்ட பெயர் தோனி. அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி, யுவராஜ் சிங் இடம் பெற்றுள்ளனர். தோனி சிறந்த கேப்டன்சி, அதிரடி பேட்டிங் போன்ற காரணங்களுக்காகவும், விராட் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூர் அணி படுதோல்விகளை அடைந்து வரும் காரணத்திற்காகவும் இடம் பெற்றுள்ளனர்.

யுவராஜ் சிங் ஆட்டம்

யுவராஜ் சிங் ஆட்டம்

யுவராஜ் சிங் நீண்ட காலம் கழித்து முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அதை கொண்டாடிய ரசிகர்கள் ட்விட்டரில் அவரது பெயரை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.

பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனியை பொறுத்தவரை இணையம் மட்டுமில்லாமல், எந்த மைதானத்திற்கு சென்றாலும் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றனர். மற்ற அணிகளின் மைதானங்கள் சென்னை ஆடும் போட்டிகளின் போது சென்னை அணி ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.

ரசிகர்கள் முழக்கம்

ரசிகர்கள் முழக்கம்

பிற அணிகளின் ஊரில் நடக்கும் போட்டிகளில் சென்னை மைதானம் போன்ற உணர்வை ஏற்படுத்தும் அளவிற்கு ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" எனவும், "தோனி, தோனி" எனவும் முழக்கமிட்டு வருகின்றனர். ஆக நேரிலும் சரி, இணையத்திலும் சரி, பெரும் வரவேற்பை பெற்ற அணி என்றால் அது சென்னை அணி தான். அதற்கு காரணம், தல தோனி!!

Story first published: Wednesday, April 3, 2019, 22:16 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+