Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே ரசிகர்களே! என்னப்பா எல்லா ஊரையும் சென்னையா மாத்துறீங்க.. ஐயோ பாவம் மும்பை இந்தியன்ஸ்!

Recommended Video

சென்னைக்கு முதல் தோல்வியை கொடுத்த மும்பை அணி

மும்பை : 2019 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது.

1
45771

இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெருமளவு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதே அளவுக்கு சென்னை அணிக்கும் ரசிகர்கள் குவிந்துள்ளனர் என அங்கே இருக்கும் பார்வையாளர்கள் கூறினர்.

போட்டிக்கு பில்டப்

போட்டிக்கு பில்டப்

ஐபிஎல் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போன்ற மோதல் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதல் தான் எனும் அளவுக்கு இந்த போட்டிக்கு பில்டப் கொடுக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

அதற்கு காரணம், அதிக ரசிகர்களை கொண்ட மும்பை, சென்னை ஆகிய இரண்டு அணிகள் தான் அதிக ரசிகர் படையைக் கொண்ட அணிகள். மேலும், இரு அணிகளும் மூன்று முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளனர்.

தவிடு பொடியாக்கிய ரசிகர்கள்

தவிடு பொடியாக்கிய ரசிகர்கள்

இந்த நிலையில் மும்பையில் நடக்கும் போட்டி என்பதால் மைதானத்தில் மும்பை அணிக்கு தான் ஆதரவு அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்கி உள்ளனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் (தோனி ரசிகர்கள்?!).

“சிஎஸ்கே, சிஎஸ்கே”

“சிஎஸ்கே, சிஎஸ்கே”

மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்த போது, ரசிகர்கள் "சிஎஸ்கே, சிஎஸ்கே" என முழக்கமிட்டனர். இதே போன்ற நிலை தான் டெல்லி போட்டியிலும் ஏற்பட்டது. அப்போது டெல்லி அணிக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் சென்னை அணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கலாம் என்ற எண்ணம் இருந்தது.

தோனியே காரணம்

தோனியே காரணம்

ஆனால், அதிக ரசிகர்கள் பலம் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் தன் சொந்த மண்ணிலேயே பாவமாக காட்சி அளித்தது. காசை கொடுத்து டீமை வாங்கலாம்.. பாசத்தை வாங்க முடியுமா?

Story first published: Wednesday, April 3, 2019, 20:54 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+