Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒழுங்கா பீல்டிங் பண்ண மாட்றாங்க.. 2 பேர் வரலை.. பிராவோவுக்கு காயம்.. என்ன பண்றதுன்னே புரியலையே!

மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சென்னை அணி கேப்டன் தோனி கூறினார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. அடுத்து சேஸ் செய்து ஆடிய சென்னை 133 ரன்கள் மட்டுமே எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மிஸ்-பீல்ட், பறிபோன கேட்ச்கள்

மிஸ்-பீல்ட், பறிபோன கேட்ச்கள்

இந்தத் தோல்வி குறித்து பேசிய தோனி, மும்பை பேட்டிங் செய்த போது 12-13 ஓவர்கள் வரை சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால், அதன் பின் மிஸ்-பீல்ட், கேட்ச்களை கோட்டை விட்டது, கடைசி ஓவர்களில் பந்துவீச்சில் சொதப்பியது போன்றவை தான் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது என குறிப்பிட்டார்.

பிராவோ ஓவர்

பிராவோ ஓவர்

சென்னை அணியின் பந்துவீச்சின் போது கடைசி இரண்டு ஓவர்களில் 45 ரன்கள் குவித்தது மும்பை அணி. பிராவோ வீசிய கடைசி ஓவரில் மட்டும் 29 ரன்கள் எடுத்தது மும்பை.

2 முறை தப்பிய க்ருனால்

2 முறை தப்பிய க்ருனால்

அதே போல, 42 ரன்கள் குவித்த க்ருனால் பண்டியா இரண்டு முறை விக்கெட் வாய்ப்பில் இருந்து தப்பினார். முதல் முறை மோகித் சர்மா கேட்சை விட்டுவிட்டார். அடுத்த முறை ஒரு ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது. ஷர்துல் தாக்குர் சில மிஸ்பீல்ட்களை செய்தார்.

கடைசி நேரத்தில் விலகல்

கடைசி நேரத்தில் விலகல்

தோனி தோல்விக்கான காரணத்துடன், சென்னை அணி பந்துவீச்சில் சரியான வீரர்கள் இன்றி தவித்து வருவதையும் சுட்டிக் கட்டினார். லுங்கி நிகிடி, டேவிட் வில்லி ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்கள் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து கடைசி நேரத்தில் விலகினர்.

பிராவோ காயம்

பிராவோ காயம்

மேலும், தற்போது பிராவோவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தோனி கூறினார். அதனால், அடுத்த போட்டியில் பிராவோ பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. சென்னை அணி சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் இன்றி தடுமாறி வருகிறது.

தோனி நிலைமை

தோனி நிலைமை

தோனி என்ன செய்வது என்று புரியாத நிலையில் இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். சரியான பந்துவீச்சாளர்கள் இல்லை. மோகித் சர்மா, ஷர்துல் தாக்குர் போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பீல்டிங்கில் சொதப்பினாலும், அவர்களை மாற்ற முடியாத சூழ்நிலையில் தான் தோனி இருக்கிறார். அந்தளவிற்கு வேகப் பந்துவீச்சாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

Story first published: Thursday, April 4, 2019, 11:44 [IST]
Other articles published on Apr 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+