பிராவோவை கிழித்து எறிந்த பொல்லார்டு - ஹர்திக் பண்டியா.. அந்த கடைசி 2 ஓவரை மறந்துருங்கப்பா!
Recommended Video

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் 15வது போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 18 ஓவர்கள் முடிவு வரை 125 ரன்கள் எடுத்து இருந்தது.
அப்போது ஜோடி சேர்ந்தனர் மும்பை அணியின் அதிரடி வீரர்கள் கீரான் பொல்லார்டு மற்றும் ஹர்திக் பண்டியா.
இவர்கள் அதிரடியாக ஆடினாலும், பிராவோ ஒரு ஓவர் வீச உள்ளார், எப்படியும் மும்பை அணி 150 ரன்களை தாண்டாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், நடந்தது வேறு.

ஷர்துல் தாக்குர் வாய்ப்பு
19வது ஓவரை ஷர்துல் தாக்குர் வீசினார். தீபக் சாஹருக்கு ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில், இவருக்கு தோனி வாய்ப்பு கொடுத்தார். காரணம், சாஹருக்கு இணையாக மூன்று ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் தாக்குர்.

ரசிகர்கள் நம்பிக்கை
சரி, கடைசி ஓவரில் பிராவோ இருக்கிறார் என சென்னை ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளில் 2 ரன்கள் கொடுத்தார். ஒரு வைடு வீசினார். அடுத்த பந்தை பிராவோ ஃபுல் டாஸ் வீசினார். அதை பொல்லார்டு சிக்ஸ் அடித்தார். அம்பயர் உயரமான ஃபுல் டாஸ் எனக் கூறி நோ பால் அறிவித்தார்.

ஹர்திக் 3 பவுண்டரி
அடுத்த ஃப்ரீ-ஹிட் பந்தில் 3 ரன்கள் சென்றது. இப்படி முதல் மூன்று பந்துகள் வீசி முடிப்பதற்குள் 13 ரன்கள் எடுத்தது மும்பை. கடைசி மூன்று பந்தை சந்தித்த ஹர்திக் பண்டியா 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்து சென்னை அணிக்கு சம்மட்டி அடி கொடுத்தார்.

கடைசி ஓவரில் 29
20வது ஓவரில் மட்டும் 29 ரன்கள் எடுத்தது பொல்லார்டு - பண்டியா ஜோடி. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்கு 171 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

அதை மறந்துடுங்க!
சென்னை அணி பேட்டிங் செய்யும் போது கடைசி 2 ஓவர்களில் மும்பை குவித்த ரன்கள் பெரும் அழுத்தமாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. சிஎஸ்கே ரசிகர்கள் அந்த கடைசி 2 ஓவரை மறந்து விடுவது நல்லது.


Click it and Unblock the Notifications