Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர் மூணு சீசனா ஒழுங்கா ஆடலை.. அப்புறமும் ஏன் விடாம வாய்ப்பு கொடுத்துட்டு இருக்கீங்க?

Recommended Video

தொடர்ந்து சொதப்பும் பொல்லார்ட்... ஆனாலும் வாய்ப்பு வழங்கும் மும்பை அணி

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த கீரான் பொல்லார்டு கடந்த சில சீசன்களாகவே சிறப்பாக விளையாடுவதில்லை.

எனினும், அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் முக்கிய வீரராகக் கருதி தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு அளித்து வருகிறது.

1
45771
33 ரன்கள்

33 ரன்கள்

2019 ஐபிஎல் தொடரில் இதுவரை மும்பை அணி ஆடிய 3 போட்டிகளிலும் கீரான் பொல்லார்டு இடம் பெற்றார். மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மட்டுமே செய்த அவர் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

மூன்று தொடர்களில் சரிவு

மூன்று தொடர்களில் சரிவு

வெறும் மூன்று போட்டிகளை மட்டுமே வைத்து ஒரு வீரரை எடை போட்டு விட முடியாது என்பது உண்மைதான். ஆனால், பொல்லார்டு 2016, 2017, 2018 என மூன்று ஐபிஎல் தொடர்களில் பெரியளவில் ரன் குவிக்கவில்லை.

ஆல்-ரவுண்டர் பொல்லார்டு?

ஆல்-ரவுண்டர் பொல்லார்டு?

தன் துவக்க காலத்தில் ஆல்-ரவுண்டராக விளங்கினார் பொல்லார்டு. அதனால் டி20 போட்டிகளில் முக்கிய வீரராக வலம் வந்தார். பின்னர், காயம் காரணமாக பந்துவீச்சை கைவிட்டு, அதிரடி பேட்ஸ்மேனாக மட்டுமே இருந்து வருகிறார். அதிலும், கடந்த மூன்று தொடர்களில் சரியாக செயல்படவில்லை.

சரிந்து வரும் செயல்பாடு

சரிந்து வரும் செயல்பாடு

2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 217 ரன்கள், 2017ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 385 ரன்கள், 2018ஆம் ஆண்டு 9 போட்டிகளில் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் பொல்லார்டு. தொடர்ந்து இந்த வருடமும் சிறப்பாக செயல்படவில்லை.

இவர் ஏன்?

இவர் ஏன்?

இதனால், கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பொல்லார்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏன் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமோ, அவர் கடந்த காலத்தில் முக்கிய வீரராக இருந்தார். போட்டிகளை வென்று கொடுத்தார் என அவர் மீது நம்பிக்கை இழக்காமல் இருந்து வருகிறது.

ரன் மழை

ரன் மழை

தன் அணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப பொல்லார்டு அடுத்த போட்டிகளில் அணியை வெற்றி பெற வைக்கும் அளவிற்கு ரன் மழை பொழிவாரா? இன்று நடக்கவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதலில் என்ன செய்கிறார் என பார்க்கலாம்.

Story first published: Wednesday, April 3, 2019, 15:44 [IST]
Other articles published on Apr 3, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+