இதுக்குத்தான் முதல்லயே சொன்னோம்.. இப்ப இப்படி ஆயிடுச்சே.. என்ன பண்றது? ரசிகர்களை புலம்ப விட்ட பும்ரா
மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியான மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே ஆன போட்டியில் பும்ரா இடது தோள்பட்டையில் காயம் அடைந்துள்ளார்.
இந்த போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்கள் குவித்தது. மும்பை அணியின் பும்ரா கடைசி ஓவரை வீசினார்.

டைவ் அடித்த பும்ரா
கடைசி ஓவரின் கடைசி பந்தை ரிஷப் பண்ட் அடித்தார். அந்த பந்தை தடுக்க முற்பட்ட பும்ரா, டைவ் அடித்தார். அப்போது அவரது இடது தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக பும்ரா துடித்தார்.

உலகக்கோப்பை
2019 ஐபிஎல் தொடர் முடிந்த இரு வாரங்களில் உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ளது. இந்த நிலையில், பும்ரா இல்லாத இந்திய அணி நிச்சயம் வேகப் பந்துவீச்சில் பலவீனமாகவே இருக்கும்.

ஓய்வு
இது போன்ற காயங்கள் ஏற்படும் என்பதால், முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் தொடரின் போது தகுந்த ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. ஆனால், அதை முக்கிய அறிவுறுத்தலாக பிசிசிஐ இதுவரை தெரிவிக்கவில்லை. இருந்தாலும் இது தொடர்பான விவாதங்கள் பெரியளவில் நடந்தது.

ஆடுவாரா?
எனினும், பும்ரா முதல் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயமடைந்துள்ளார். தொடரின் முதல் போட்டியிலேயே பும்ரா காயமடைந்துள்ள நிலையில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications