For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

20 பந்துகளை தாண்டாத மும்பை வீரர்கள்.. யுவராஜ் அரைசதம் வீண்.. ரிஷப் பண்ட் சரவெடி.. டெல்லி வெற்றி!!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இடையே நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாத மும்பை அணி 2019 ஐபிஎல்-இல் தன் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணிக்கு ப்ரித்வி ஷா 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களில் வெளியேறினார். எனினும், தவான் 43, கோலின் 47 அணியின் ரன்களை உயர்த்தினர்.

ரிஷப் பண்ட் சரவெடி

ரிஷப் பண்ட் சரவெடி

கடைசி சில ஓவர்களில் ரிஷப் பண்ட் சரவெடியாக அதிரடி ஆட்டம் ஆடி 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 213 ரன்கள் குவித்தது. மும்பை அணி இதுவரை 200+ ரன்களை சேஸ் செய்திருக்காத நிலையில், அந்த அணிக்கு 214 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. .

மும்பை பந்துவீச்சு

மும்பை பந்துவீச்சு

மும்பை அணியின் பந்துவீச்சு சுமாராகவே இருந்தது. அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 10+ரன்களை வாரிக் கொடுத்திருந்தனர். மெக்ளினகன் 3, பும்ரா, ஹர்திக், பென் கட்டிங் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

மும்பை பேட்டிங்

மும்பை பேட்டிங்

மும்பை அணியில் யுவராஜ் சிங் தவிர்த்து எந்த வீரரும் 20 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை. ரோஹித் 14, டி காக் 27, சூர்யகுமார் 2, பொல்லார்டு 21, ஹர்திக் பண்டியா 0, க்ருனால் பண்டியா 32 என யுவராஜ் தவிர்த்து பிற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே அடித்தனர்.

யுவராஜ் அரைசதம்

யுவராஜ் அரைசதம்

யுவராஜ் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிய முதல் ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். அவர் 35 பந்துகளில் 53 ரன்கள் அடித்து வெளியேறினார்.

பும்ரா காயம்

பும்ரா காயம்

பந்துவீச்சின் போது கடைசி பந்தில் பீல்டிங் செய்து காயமடைந்த பும்ரா பேட்டிங் செய்ய வரவில்லை. இதையடுத்து, மும்பை அணி 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டெல்லி அணி 37 ரன்களில் அபார வெற்றி பெற்று 2019 ஐபிஎல் தொடரை நம்பிக்கையுடன் தொடங்கியது.

Story first published: Monday, March 25, 2019, 0:31 [IST]
Other articles published on Mar 25, 2019
English summary
MI vs DC IPL 2019 : Delhi registered victory against Mumbai Indians
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+