Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாரே வாஹ்.. தோனியின் ஷாட்டை காப்பியடித்து... அவரது சாதனையையே முறியடித்த ரிஷப் பண்ட்!!

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 213 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 78 ரன்கள் அடித்து அசத்தினார்.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

இந்த போட்டியின் பேட்டிங்கின் போது ரிஷப் பண்ட் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ் அடித்து பும்ராவை ஆஃப் செய்தார். ரிஷப் பண்ட் இப்படி ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

பும்ராவின் யார்க்கர்

பும்ராவின் யார்க்கர்

18வது ஓவரின் போது பும்ரா தனது சிறப்பான யார்க்கர் பந்தை வீசினார். பும்ராவின் யார்க்கர் பந்தை அத்தனை எளிதில் யாரும் அடித்து ஆடி விட முடியாது. ஆனால், யார்க்கர் பந்துகளில் எப்படி சிக்ஸ் அடிப்பது என உலகுக்கு காட்டிய தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்தார்.

இடது கை ஷாட்

இடது கை ஷாட்

தோனி வலது கை பேட்ஸ்மேனாக அடிக்கும் அதே ஹெலிகாப்டர் ஷாட்டை, இடது கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் அடித்தது நேற்றைய போட்டியின் சிறந்த ஷாட்டாக அமைந்தது. மேலும் ரிஷப் பண்ட் ஏழு ஃபோர், ஏழு சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்தார்.

சாதனை அரைசதம்

சாதனை அரைசதம்

ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் 18 பந்துகளில் அரைசதம் கடந்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விரைவான அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை தோனியிடம் இருந்து தட்டிப் பறித்தார்.

தோனிக்கு அடுத்து..

தோனி முன்பு 20 பந்துகளில் அரைசதம் அடித்து இருந்ததே மும்பை அணிக்கு எதிராக மிக விரைவாக அடித்த அரைசதமாக இருந்தது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பி அடித்த ரிஷப் பண்ட், அப்படியே அவரது சாதனையையும் முறியடித்துள்ளார். கண்டிப்பாக, தோனிக்குப் பின் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பார் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Monday, March 25, 2019, 12:36 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+