Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரபட்சம் பார்க்காமல் பும்ரா, பண்டியா பந்துவீச்சை துவைத்துக் காயப் போட்ட ரிஷப் பண்ட்!!

மும்பை : டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரிஷப் பண்ட், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியில் புதிய உச்சத்தைத் தொட்டார்.

ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

அந்த அணியின் ப்ரித்வி ஷா 7, தவான் 43, ஸ்ரேயாஸ் ஐயர் 16, கோலின் இங்கிராம் 47 ரன்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ருத்ர தாண்டவமாடினார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு ஆடி வரும் நிலையில், அவரது பேட்டிங் கடந்த ஐபிஎல் தொடரைப் போல இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதை நிரூபிக்கும் வகையில், விக்கெட்கள் ஒருபுறம் வீழ்ந்து கொண்டு இருந்த போதும் ரன் ரேட்டைக் கூட்டிக் கொண்டே போகும் அளவுக்கு அதிரடி காட்டினார் ரிஷப்.

7 சிக்ஸர்கள்

7 சிக்ஸர்கள்

ரிஷப் பண்ட்டின் இந்த அதிரடி இன்னிங்க்ஸில் 7 ஃபோர், 7 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 288.88 ஆக இருந்தது. இவரது அதிரடியால் டெல்லி அணி 213 ரன்கள் குவித்தது. மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 200க்கும் அதிகமான ஸ்கோரை சேஸ் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரபட்சம் கிடையாது

பாரபட்சம் கிடையாது

மேலும், இந்தப் போட்டியில் ரிஷப் பண்ட் இந்திய அணியில் தன் சக வீரர்களும், தன் நண்பர்களுமான பும்ரா, ஹர்திக் பண்டியா ஆகியோரது பந்துவீச்சை பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கினார். உலகக்கோப்பை அணிக்கு தேர்வாக ரிஷப் பண்ட்டுக்கு இந்த அதிரடி ஆட்டம் உதவியாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 24, 2019, 23:06 [IST]
Other articles published on Mar 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+