மும்பை : மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நடந்த சுவாரஸ்மான சம்பவங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் அனைவரும் அதிரடியில் மிரட்டிக் கொண்டிருக்க, ஹர்திக் பாண்டியா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் மும்பை சோசியல் மீடியா பக்கத்தில், தரமான பவர் ஹிட்டிங் இன்னிங்ஸ் ஹர்திக் என்று பாராட்டி இருந்தார்கள். இதனை மார்க் ஆண்டனி படத்தில் விஷாலை பார்த்து எஸ்ஜே சூர்யா, "ஃபோன்ல டைம் டிராவலா.. என்னடா செல்லம் குழப்புற.." என்பார். அதனை மாற்றி, மும்பை இந்தியன்ஸ் அணியாக விஷாலையும், ரசிகர்களாக எஸ்ஜே சூர்யாவையும் மாற்றி, "சாலிட்.. பவர் பேக்கட்டா.. என்னடா செல்லம் குழப்புற" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

சலார் படத்தில் நடிகர் பிரித்விராஜ், தனது நண்பனான பிரபாஸை அழைத்து வந்த பின், "நீங்கலாம் கணிக்கவே முடியாத பைத்தியக்காரனை கூட்டிட்டு வந்துருக்கேன்டா" என்பார். நேற்றைய ஆட்டத்தில் கடைசி நேரத்தில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 39 ரன்களை விளாசினார். இதனால் ரொமாரியோ ஷெப்பர்டை பிரபாஸுடன் ஒப்பிட்டு பிரித்விராஜ் சொல்வதாக, கணிக்கவே முடியாத மாதிரி கரீபியன் மண்ணில் இருந்து ஒரு காட்டனை கூட்டிட்டு வந்துருக்கோம் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட போது, சூர்யகுமார் யாதவ் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். இதனால் ரோகித் சர்மாவுக்கு விஸ்வாசமான தளபதியாக அவர் பார்க்கப்பட்டார். இந்த நிலையில் நடப்பு சீசனில் நேற்று முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ரசிகர்களிடையே அவரது ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இளவரசு, "For my Boy.. Ceaser" என்று சொல்வார். அதனை மாற்றி சூர்யகுமார் யாதவ், "For My Captain Rohit" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பட்லர், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அந்த அணிக்கு எதிராக பொளந்து கட்டுவது வழக்கம். இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ஸ்டப்ஸ். சிறப்பாக ஆடிய அவர் 25 பந்துகளில் 71 ரன்களை விளாசினார். அதனை கில்லி படத்தில் தாமு, ”ஆனாலும் மாமே.. உங்கப்பா ரொம்ப தான் போலீஸ் ஆகுறாருடா” என்பார். அதனை மாற்றி மும்பை ரசிகர்கள், ”ஆனாலும் முன்னாள் பல்தான்ஸ் நம்மை ரொம்ப அடிக்கிறாங்க டா” என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெந்தப்புண்ணில் வேல் பாய்ச்சும் ரகம்.

சிங்கப்பூரை சேர்ந்தவர் என்பதால் டிம் டேவிட்டை சோசியல் மீடியாவில் சிங்கப்பூர் சித்தப்பா என்று ரசிகர்கள் கலாய்ப்பார்கள். கலகலப்பு படத்தில் நடிகர் சிவா, இளவரசுவை அருகில் வைத்து, ”மாமாவுக்கு கோபம் வந்துருச்சே” என்று வில்லன்களிடம் கோர்த்துவிடுவார். அதுபோல் ஒரு வழியாக டிம் டேவிட் நேற்று 21 பந்துகளில் 45 ரன்களை விளாசி அசத்தினார். இதனை கிண்டல் செய்யும் வகையில், ”சித்தப்பாவுக்கு கோபம் வந்துருச்சே” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி.
