Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Memes: எல்லாரும் சூனா பானா ஆகிட முடியுமா பல்தான்ஸ்.. மும்பை அணியை வெளுக்கும் ஆர்சிபி ரசிகர்கள்!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய தரமான மீம்ஸை பார்க்கலாம்.

கண்ணாத்தாள் படத்தில் விஷம் குடிக்க தயாராகும் நபரிடம் வடிவேலு சென்று அவரிடம் இருந்த விஷத்தை வாங்கி குடித்துவிட்டு, "ஏன்டா எல்லாரும் சூனா பானா ஆகிவிட முடியுமாடா டேய்" என்று சொல்வார். அதில் வரும் விஷம் குடிக்க தயாரான நபராக தீபக் சஹரையும், சூனா பானாவாக யாஷ் தயாளையும் மாற்றி, "ஏன்டா எல்லாரும் சூனா பானா ஆகிற முடியுமாடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாட்டிக்கிட்டரு ஒருத்தரு மொமண்ட்.

IPL 2025 memes Gujarat Titans Mumbai Indians

அந்நியன் படத்தில் பிரகாஷ் ராஜை அடிக்கும் விக்ரம், திடீரென அம்பியாக மாறி, "அச்சச்சோ என்ன சார் மூக்குல இரத்தம்.. யாருங்க இவர போட்டு அடிக்கிறது" என்று கேட்பார். அதில் வரும் பிரகாஷ் ராஜாக ஹர்திக் பாண்டியாவையும், விக்ரமாக குஜராத் அணியையும் மாற்றி, "அச்சச்சோ என்ன சார் மூக்குல இரத்தம்.. யாருங்க இவர போட்டு அடிக்கிறது" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் செத்தான்டா சிவனாண்டி ரகம்.

IPL 2025 memes Gujarat Titans Mumbai Indians

சென்னை 28 முதல் பாகத்தில் கோபத்தில் சண்டை போட்டு போகும் ஜெய், கடைசியாக பந்தை எறிவார். அந்த கேட்சை கூட பிரேம்ஜி பிடிக்காமல் கோட்டைவிட்டு அடி வாங்குவார். நேற்றைய ஆட்டத்தில் பவர் பிளே ஓவர்களுக்குள் 3 கேட்ச்களை குஜராத் வீரர்களை கோட்டைவிட்டனர். இதில் பிரேம்ஜியாக குஜராத் அணி ஃபீல்டர்களை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் என்ன கொடுமை சார் ரகம்.

IPL 2025 memes Gujarat Titans Mumbai Indians

வடசென்னை படத்தில் செந்திலை பின்னால் இருந்து அடிக்கும் தனுஷ், "என் விஸ்வாசம் குணாக்குடா" என்று சொல்வார். இதில் வரும் தனுஷாக ஹர்திக் பாண்டியாவையும், செந்திலாக மும்பை அணியையும் மாற்றி, ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியதை வைத்து, "என் விஸ்வாசம் குஜராத்துக்குடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இனிதான் கதையே ஆரம்பிக்குது ரகம்.

IPL 2025 memes Gujarat Titans Mumbai Indians

விக்ரம் படத்தில் கமலை ஃபோனில் அழைக்கும் ஃபகத் ஃபாசில், "Big Fan of Your Work Sir" என்று சொல்வார்.. அதில் வரும் கமல்ஹாசனாக பும்ராவையும், ரசிகர்களாக ஃபகத் ஃபாசிலையும் மாற்றி, 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 15 டாட் பால்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதை வைத்து Big Fan of Your Work sir என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் இதுதான்டா கிரிக்கெட் ரகம்.

IPL 2025 memes Gujarat Titans Mumbai Indians
Story first published: Wednesday, May 7, 2025, 8:20 [IST]
Other articles published on May 7, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+