Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாரு சாமி நீ? முதல் போட்டியிலேயே மிரளவைத்த மும்பை இந்தியன்ஸ் பவுலர் அஸ்வனி குமார்

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்காக அறிமுகமானார் வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார். தனது முதல் போட்டியிலேயே தனது முதல் மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டி இருக்கிறார் அஸ்வனி குமார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வனி குமார் தனது முதல் ஓவரில் அஜிங்க்யா ரஹானே விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து தான் வீசிய இரண்டாவது ஓவரில் ரிங்கு சிங் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரது விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆண்ட்ரே ரஸ்ஸல் விக்கெட்டையும் சாய்த்தார்.

Ashwani Kumar Mumbai Indians Kolkata Knight Riders IPL 2025

முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் இளம் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வியப்பை ஏற்படுத்தியதைப் போலவே அஸ்வனி குமாரும் தனது அறிமுக போட்டியில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

இதை அடுத்து யார் இந்த அஸ்வனி குமார் என ரசிகர்கள் தேடி வருகின்றனர். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் ஆவார். பஞ்சாபின் உள்ளூர் போட்டியில் விளையாடி வந்தார். அங்கிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அடையாளம் கண்டது. வேகப்பந்துவீச்சாளரான அவர் கட்டர், ஸ்லோ பவுன்சர், வைட் யார்க்கர், ஃபுல்டாஸ் என அனைத்து வகையான பந்துகளை வீசுவதிலும் திறன் படைத்த வீரராக இருக்கிறார்.

அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக தனது 18 வயதில் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். பின்னர் லிஸ்ட் ஏ போட்டிகளில் 20 வயதிலும், சீனியர் டி20 போட்டிகளில் 21 வயதிலும் அறிமுகமானார். அவர் பஞ்சாப் மாநிலத்தின் டி20 தொடரான ஷேர்-இ-பஞ்சாப் டி20 தொடரில் அறிமுகமாகும் வரை வெளி உலகத்திற்கு பெரிய அளவில் தெரியாமல் இருந்து வந்தார்.

அந்தத் தொடரில் ஒரு போட்டியில் முதல் இரண்டு ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்து இருந்தார் அஸ்வனி குமார். ஆனால், அதே போட்டியின் கடைசி ஓவரில் 11 ரன்களை தடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் அவர் சிறப்பாக பந்து வீசி ஒயிட் யார்க்கர் மற்றும் மெதுவான பந்துகளை வீசி 10 ரன்களில் சுருக்கினார். ஒரு ரன் வித்தியாசத்தில் அவர் ஆடிய பிஎல்வி அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து அஸ்வனி குமார் பஞ்சாப் அணிக்காக சையது முஸ்தாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே போட்டிகளில் விளையாடினார். அங்கிருந்து தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வனி குமார் மூன்று ஓவர்கள் பந்து வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

Story first published: Monday, March 31, 2025, 21:19 [IST]
Other articles published on Mar 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+