Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs KKR: வரலாற்று வெற்றி.. 29 ஓவரில் முடிந்த மேட்ச்.. கொல்கத்தாவை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்!

மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை இந்தியன்ஸ் அணி முதன்முறையாக இந்த ஆண்டு வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது என்பதால் அந்த அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு ஏற்ப முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வேகப்பந்துவீச்சால் சின்னாபின்னம் ஆக்கியது மும்பை இந்தியன்ஸ்.

முதலில் ட்ரெண்ட் போல்ட் தான் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் வீழ்த்தினார். அதன் பின் தீபக் சஹார் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அறிமுக வேகப்பந்துவீச்சாளர் அஸ்வனி குமார் மூன்று ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை சாய்த்தார். ஹர்திக் பாண்டியா, விக்னேஷ் புத்தூர் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

MI vs KKR result and highlights Mumbai Indians Secure Historic Victory Over KKR in Just 29 Overs

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அங்குரிஷ் ரகுவன்ஷி 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு அடுத்து ரமன்தீப் சிங் 12 பந்துகளில் 22 ரன்களை சேர்த்திருந்தார்.

அடுத்து 117 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. ரோஹித் சர்மா 13 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துவக்க வீரர் ரயன் ரிக்கெல்டன் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்தார். சூர்யகுமார் யாதவ் 9 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்திருந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை உறுதி செய்தனர்.

12.5 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. மொத்தமாக 29.1 ஓவர்களில் ஒட்டுமொத்த போட்டியுமே முடிவுக்கு வந்தது. இந்த வெற்றியின் மூலம் வான்கடே மைதானத்தில் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரே எதிரணியை அதிக முறை வீழ்த்திய வரலாற்று சாதனையையும் செய்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ். மும்பை வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 10 முறை வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் 24 வெற்றிகளை பெற்று ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல்-இல் ஒரே அணிக்கு எதிராக அதிக வெற்றிகள்

24 - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்*
21 - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
21 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
20 - மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
20 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல்-இல் ஒரு மைதானத்தில் எதிரணிக்கு எதிராக அதிக வெற்றிகள்

10 - வான்கடே மைதானம் - மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்*
9 - கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
8 - வான்கடே மைதானம் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
8 - பெங்களூரு சின்னசாமி மைதானம் - மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Story first published: Monday, March 31, 2025, 22:47 [IST]
Other articles published on Mar 31, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+