For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் போட்டி மாதிரி தெறிக்கவிடுவாருன்னு பார்த்தா.. பௌலிங்கில் விட்டதை பேட்டிங்கில் பிடித்த அல்சாரி!!

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பை அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. தன் முதல் போட்டியில் அசத்தலாக பந்து வீசிய அல்சாரி ஜோசப், இந்தப் போட்டியில் மோசமாக பந்துவீசினார்.

அல்சாரி ஜோசப் தன் அறிமுக ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஐபிஎல்-இன் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.

அசத்தல் அறிமுகம்

அசத்தல் அறிமுகம்

ஹைதராபாத் போட்டியில் 4 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்கள் கைப்பற்றினார் ஜோசப். அதன் மூலம் தன் அறிமுகப் போட்டியிலேயே ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்து மிரட்டினார். அடுத்த போட்டியிலும் அதே போல செயல்படுவார் என எதிர்பார்த்த நிலையில், ரன்களை வாரி இறைத்தார்.

22 ரன்கள் கொடுத்தார்

22 ரன்கள் கொடுத்தார்

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்கள் வீசிய ஜோசப் 22 ரன்கள் கொடுத்தார். அதிக ரன்கள் கொடுத்ததை அடுத்து ஜோசப்புக்கு அதன் பின் பந்துவீசும் வாய்ப்பை வழங்கவில்லை மும்பை அணியின் கேப்டன் பொல்லார்டு.

மும்பை தவிப்பு

மும்பை தவிப்பு

எனினும், மும்பை அணியின் சேஸிங்கில் மிக முக்கிய பங்காற்றினார் ஜோசப். 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 15.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு 6 விக்கெட்கள் இழந்து தவித்தது. வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையில் இருந்தது.

ஒத்துழைப்பு

ஒத்துழைப்பு

அப்போது பேட்டிங் செய்ய வந்த அல்சாரி ஜோசப், கீரான் பொல்லார்டுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடி மும்பை அணி 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டியை எடுத்து வந்து ஆட்டமிழந்தார்.

கடைசி பந்தில் வெற்றி

கடைசி பந்தில் வெற்றி

கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அல்சாரி ஜோசப், 2 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார். அவர் 13 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், அது மும்பை அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. பந்துவீச்சில் விட்டதை, பேட்டிங்கில் பிடித்தார் அல்சாரி ஜோசப்.

Story first published: Thursday, April 11, 2019, 11:02 [IST]
Other articles published on Apr 11, 2019
English summary
MI vs KXIP IPL 2019 : Alzarri Joseph bowling performance dropped down in 2nd match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+