Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நல்லா வசமா சிக்கிய ஹர்திக் பண்டியா.. ஆளுக்கு ஒரு ஓவர்.. பிரித்து மேய்ந்த கிறிஸ் கெயில், ராகுல்!!

மும்பை : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வெற்றி பெற்றாலும், அதிக ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்தார் மும்பை அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா.

2019 ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை சந்தித்தது மும்பை. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. கீரான் பொல்லார்டு தலைமையில் களமிறங்கியது மும்பை.

1
45900
சின்னாபின்னமான பண்டியா

சின்னாபின்னமான பண்டியா

இதுவரை பல ஆண்டுகளாக ரோஹித் தலைமையில் மட்டுமே மும்பை ஆடியிருந்த நிலையில், அவர் இல்லாமல் ஒவ்வொரு வீரரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பண்டியா கிறிஸ் கெயில், ராகுல் இடையே சிக்கி சின்னாபின்னமானார்.

கிறிஸ் கெயில் அதிரடி

கிறிஸ் கெயில் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில், ராகுல் அதிரடி துவக்கம் அளித்தனர். அப்போது 9வது ஓவரை வீச வந்தார் ஹர்திக் பண்டியா. அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் சந்தித்த கிறிஸ் கெயில் ஒரு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து அந்த ஓவரில் 17 ரன்கள் குவித்தார்.

19வது ஓவர்

19வது ஓவர்

அடுத்து ஹர்திக் பண்டியா மூன்று ஓவர்கள் வீசி முடித்த போது 32 ரன்கள் கொடுத்திருந்தார். 19வது ஓவரை வீசினார் ஹர்திக். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய ராகுல் அந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளை சந்தித்தார்.

மோசமான பந்துவீச்சு

மோசமான பந்துவீச்சு

அதில் முதல் நான்கு பந்துகளில் மூன்று சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுத்தது பஞ்சாப். தன் நான்கு ஓவர்கள் முடிவில் ஹர்திக் பண்டியா 57 ரன்கள் கொடுத்து பரிதாப நிலையில் இருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் இதுவே ஹர்திக் பண்டியாவின் மிக மோசமான பந்துவீச்சு ஆகும்.

Story first published: Thursday, April 11, 2019, 15:05 [IST]
Other articles published on Apr 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+