இந்த பண்டியா சும்மாவே இருக்க மாட்டார் போலையே.. பஞ்சாப் வீரரை வம்புக்கு இழுத்த ஹர்திக் பண்டியா!
Recommended Video

மும்பை : கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பண்டியா பஞ்சாப் பந்துவீச்சாளரை பார்த்து முறைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில் பஞ்சாப் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து வந்த போது, ஹர்திக் பண்டியா, பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஹார்டஸ் வில்ஜோனை பார்த்து முறைத்தார்.

முறைத்தனர்
12வது ஓவர் முடிந்த பின் வில்ஜோனை பந்து வீச அழைத்தார் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின். அப்போது அவரை பார்த்து ஏதோ முணுமுணுத்தார் பண்டியா. பின்னர் இருவரும் நேருக்கு நேர் மிகவும் நெருக்கமாக நின்று ரெஸ்லிங் வீரர்கள் போல பார்த்து முறைத்துக் கொண்டனர்.

டான்ஸ் ஆடிய வில்ஜோன்
இதில் வேடிக்கை என்னவென்றால், பண்டியா மிகவும் சீரியஸாக கோபப்பட்டு அவரை முறைத்துக் கொண்டு இருந்தார். ஆனால், வில்ஜோன் டான்ஸ் ஆடிக் கொண்டே, பண்டியாவை பார்த்து சிரித்து விட்டு சென்றார்.

பண்டியாவிற்கு தடை
ஹர்திக் பண்டியா பெண்கள் குறித்து மோசமாக பேசியதற்காக அவருக்கு சில வாரங்கள் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணையில் சில நாட்கள் முன்பு தான் பண்டியா மன்னிப்பு கோரி இருந்தார்.
ஏன் இப்படி?
ஹர்திக் பண்டியா இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்தார். பேட்டிங்கிலும் வெறும் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில், மீண்டும் களத்தில் பஞ்சாப் வீரரை தேவையில்லாமல் வம்பிழுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications