Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சரியான நேரம் பார்த்து சதம் அடித்த ராகுல்.. ஏப்ரல் 15 முக்கியமான நாளாச்சே!!

மும்பை : கே.எல்.ராகுல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்குமா என ஐபிஎல் தொடருக்கு முன் தவித்து வந்தார்.

2019 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி வரும் அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் ராகுலின் உலகக்கோப்பை கனவு நனவாக வாய்ப்புள்ளது.

முதல் ஐபிஎல் சதம்

முதல் ஐபிஎல் சதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய ராகுல், கடைசி நேரத்தில் தன் வேகத்தை மேலும் கூட்டி சரியாக 64 பந்துகளில் சதம் அடித்தார். இது ராகுலின் முதல் ஐபிஎல் போட்டி சதம் ஆகும்.

பார்மை மீட்டார்

பார்மை மீட்டார்

கடந்த ஆண்டு பார்ம் இழந்து காணப்பட்ட ராகுல், இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரில் ஓரளவு நன்றாக ஆடினார். அதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடி வரும் அவர், இந்த சீசனில் இதுவரை ஏழு போட்டிகளில் 3 அரைசதம், ஒரு சதம் அடித்துள்ளார்.

அசத்தல் ரன் குவிப்பு

அசத்தல் ரன் குவிப்பு

முதல் இரண்டு போட்டிகளில் 4, 1 என ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றிய ராகுல் அதன் பின் 71*, 15, 55, 71*, 100* என அசத்தலாக ரன் குவித்தார். இதுவரை ஏழு போட்டிகளில் 317 ரன்கள் குவித்துள்ளார் ராகுல். இதன் சராசரி 79.25 ஆகும்.

4வது வீரர்

4வது வீரர்

துவக்க வீரரான ராகுல் மூன்று போட்டிகளில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, சஞ்சு சாம்சன் ஆகியோரைத் தொடர்ந்து, நான்காவது வீரராக இந்த சீசனில் சதம் அடித்துள்ளார் ராகுல்.

உலகக்கோப்பை இடம்

உலகக்கோப்பை இடம்

உலகக்கோப்பைக்கான இந்திய அணி வரும் ஏப்ரல் 15 அன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராகுல் அடித்துள்ள சதம் அவரது வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் மாற்று துவக்க வீரராக ராகுல் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Wednesday, April 10, 2019, 23:42 [IST]
Other articles published on Apr 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+