Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெயில், ராகுல் ரன் குவிப்பை தூக்கி அடித்த கேப்டன் பொல்லார்டு.. பஞ்சாப் பரிதாப தோல்வி!!

மும்பை : 2019 ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா காயம் காரணமாக ஆடவில்லை. அவருக்கு பதில் கீரான் பொல்லார்டு கேப்டன் பதவியை ஏற்றார். சித்தேஷ் லாட் என்ற இளம் வீரர் அறிமுகம் செய்யப்பட்டார்.

1
45900
கிறிஸ் கெயில் அதிரடி

கிறிஸ் கெயில் அதிரடி

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ். பஞ்சாப் அணிக்கு கிறிஸ் கெயில் 36 பந்துகளில் 63 ரன்கள் குவித்து அதிரடி துவக்கம் அளித்தார். மறுபுறம் மற்றொரு துவக்க வீரர் ராகுல் தொடர்ந்து ரன் குவித்து வந்தார்.

ராகுல் சதம்

ராகுல் சதம்

டேவிட் மில்லர் 7, கருண் நாயர் 5, சாம் கர்ரன் 8 என ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், ராகுல் கடைசி வரை நின்று 64 பந்துகளில் சதம் அடித்தார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழந்து 197 ரன்கள் குவித்தது.

மும்பை பந்துவீச்சு

மும்பை பந்துவீச்சு

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களில் சுழற் பந்துவீச்சாளர் ராகுல் சாஹர் மட்டுமே ஓவருக்கு 6.75 ரன்கள் சராசரியாக கொடுத்து ஆறுதல் அளித்தார். மற்றவர்கள் ஓவருக்கு 8 முதல் 14 ரன்கள் வரை கொடுத்தனர். ஹர்திக் பண்டியா 2, பும்ரா, பெஹ்ரண்டாப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மும்பை சுமார் துவக்கம்

மும்பை சுமார் துவக்கம்

அடுத்து 198 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்யத் துவங்கிய மும்பை அணிக்கு துவக்க வீரர்கள் சித்தேஷ் லாட் 15, டி காக் 24 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் அளித்தனர். சூர்யகுமார் யாதவ் 21 ரன் எடுத்தார்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறி வந்தாலும், தற்காலிக கேப்டன் பொல்லார்டு பொறுப்பான அதிரடி ஆட்டம் ஆடினார். அவரை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் திணறினர்.

3 ஓவர்களில்..

3 ஓவர்களில்..

22 பந்துகளில் அரைசதம் கடந்தார் பொல்லார்டு. அப்போது 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது மும்பை. அடுத்த 2 ஓவர்களில் பொல்லார்டின் அதிரடியால் 25 ரன்கள் சேர்த்தது மும்பை.

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவர் பரபரப்பு

கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை. அந்த ஓவரை வீசிய அங்கித் ராஜ்புத் முதல் பந்தை நோ பாலாக வீசினார். அதில் சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. அடுத்து ஒரு ஃபோர் அடித்து ஆட்டமிழந்தார் அவர். கடைசி 4 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ராகுல் சாஹர், அல்சாரி ஜோசப் ஒற்றை ரன்களாக ஓடி அணியை கடைசி பந்தில் வெற்றி பெற வைத்தனர்.

சிக்ஸர் மன்னன் பொல்லார்டு

சிக்ஸர் மன்னன் பொல்லார்டு

மும்பை அணியின் அதிரடி வீரர் பொல்லார்டை சமாளிக்க முடியாத அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறினாலும், கேப்டன் என்ற பொறுப்பை உணர்ந்து 31 பந்துகளில் 83 ரன்கள் குவித்த பொல்லார்டு தன் அணியை வெற்றி பெற வைத்தார். அவரது இந்த வெறித்தனமான ஆட்டத்தில் 10 சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 11, 2019, 15:07 [IST]
Other articles published on Apr 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+