Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியொரு பிரச்சனையா.. அகமதாபாத் மைதானத்தில் சோகத்துடன் அமர்ந்த அம்பானி குடும்பம்.. என்ன நடந்தது?

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் 2வது குவாலிஃபையர் போட்டி தொடங்குவதற்கு முன்பாக மும்பை அணியின் உரிமையாளரான ஆகாஷ் அம்பானி சோகத்துடன் அமர்ந்திருந்தார். ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் மழை தொடங்கிய நிலையில், மும்பை அணியின் சூழல் மோசமாகி இருக்கிறது. மழை தொடர்ந்து பெய்தால், என்ன நடக்கும் என்பதை அறிந்துள்ளதால், சோகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 2வது குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெல்லும் அணி ஆர்சிபி அணியை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாடும். இதனால் பஞ்சாப் - மும்பை இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பஞ்சாப் அணி தடுமாற்றத்தை சந்தித்துள்ள சூழலில், மும்பை அணி பீஸ்ட் ஃபார்மில் இருக்கிறது.

MI vs PBKS Akash Ambani is looking sad after Rain Interruption in between the Mumbai vs Punjab Qualifier 2 Match in IPL 2025

டாஸ் வென்ற பஞ்சாப்

இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அகமதாபாத் மைதானத்தில் சேஸிங் செய்வது எளிது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் அணி தரப்பில் சாஹல் கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் மும்பை அணிக்காக க்ளீசன் நீக்கப்பட்டு ரீஸ் டாப்லி சேர்க்கப்பட்டிருக்கிறார்.

திடீரென வந்த மழை

டாஸ் போடப்பட்டு இரு அணிகளின் வீரர்களும் தயாரான நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் உடனடியாக மைதானத்தை தார்பாய் கொண்டு ரசிகர்கள் மூடினர். இதனால் மும்பை அணி ரசிகர்கள் சோகம் அடைந்தனர். ஆனால் 7.27 மணிக்கு மழை நின்றது. இதன்பின் பஞ்சாப் அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்த போது, மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

அம்பானி சோகம்

இதனால் மும்பை அணி சோகம் அடைந்தது. ஏனென்றால் இந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டால், புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த விவகாரம் தெரிய வந்ததால், மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி சோகத்துடன் அகமதாபாத் மைதானத்தில் அமர்ந்திருந்தார்.

விதிகள் என்ன?

நடப்பு ஆண்டில் மும்பை அணி எம்எல்சி மற்றும் எஸ்ஏ20 லீக் தொடர்களை அடுத்தடுத்து வென்றது. இதனால் ஆகாஷ் அம்பானி உற்சாகம் அடைந்தார். அதே உற்சாகத்துடன் மும்பை அணி ஐபிஎல் தொடரை வெல்ல வேண்டும் என்பதில் ஆகாஷ் அம்பானி தீவிரமாக உள்ளார். மேலும், இரவு 9.40 மணிக்கு பின் மழை தொடரும் பட்சத்தில், ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Sunday, June 1, 2025, 20:07 [IST]
Other articles published on Jun 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+