Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

MI vs RCB: நண்பா! எப்படி இருக்க? களத்தில் அன்பை பரிமாறி கொண்ட விராட் கோலி, ரோகித் சர்மா

மும்பை: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா களத்தில் சந்தித்த பேசி கொண்ட நிகழ்வு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாங்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு ஜாம்பவான்களைக் காண ரசிகர்கள் திரண்டனர்.

மும்பை முதலில் பந்துவீசத் தீர்மானிக்க, பேட் செய்ய வந்த கோலி, பீல்டிங் ரோஹித் ஷர்மா அருகே நின்று பேசினார். கோலி கூறிய ஏதோ ஒன்று ரோஹித்தை புன்னகைக்க வைத்தது. இத்தருணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது, இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கோலி, ரோகித் சர்மா இருவரும் கேப்டன்சியைதங்களது அணிக்காக துறந்துவிட்டனர். தற்போது இருவரும் சாதாரண வீரர்களாகவே விளையாடுகின்றனர். சர்வதேச டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்த ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற நிலையில், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பேட்டிங் செய்து கொண்டிருந்த கோலி, ரோகித்திடம் பேசியது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது.

கோலி அரைசதம் அடித்திருந்தாலும், அவரது மந்தமான பேட்டிங் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. ஆர்சிபி முன்னாள் கேப்டன் கோலி, 37 பந்துகளில் 50 ரன்கள் (5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) பெற்று, 15வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு, ஃபில் சால்ட் மற்றும் விராட் கோலி வலுவான 120 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து பெரிய ஸ்கோருக்கான அடித்தளமிட்டனர். கோலி போல்ட் பந்துவீச்சில் ஸ்டைலாக ஒரு சிக்ஸர் அடித்தாலும், சால்ட் ஆக்ரோஷமாக விளையாடி, போல்ட், ஹர்திக் பாண்டியாவை ஆரம்பத்திலேயே தாக்கினார்.

சான்ட்னர் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்து சால்ட் தனது அதிரடியை உச்சத்திற்கு கொண்டு சென்றார். பும்ரா ரன்களைக் கட்டுப்படுத்தினும், ஆர்சிபி பவர்பிளேயில் 71 ரன்கள் எடுத்தது. மார்கண்டேவை ஆதிக்கம் செலுத்திய சால்ட், பின்னர் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ரஜத் பட்டிதார் மின்னல் வேகத்தில் 17 பந்துகளில் அரைசதம் அடிக்க, கோலி தனது நிதானமான அரைசதத்துடன் இன்னிங்ஸை நிலைநிறுத்தினார். டிம் டேவிட் அபாரமாக விளையாட ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 240 ரன்கள் அடித்துள்ளது.

Story first published: Sunday, April 12, 2026, 23:30 [IST]
Other articles published on Apr 12, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+