Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"சைலன்ஸ் பண்ணதே கம்மின்ஸ் அண்ணனை தான்யா" அடங்கிய ஐதராபாத்.. அடக்கிய மும்பை.. தெறிக்கும் மீம்ஸ்!

மும்பை: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்று மும்பை அணி கம்பேக் கொடுத்துள்ள நிலையில், நேற்றைய ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் உருவாக்கப்பட்ட மீம்ஸை பார்க்கலாம்.

தலைநகரன் படத்தில் போலீசாக வரும் மனோபாலாவிடம் மாட்டிக் கொள்ளும் வடிவேலு, "என்னைய அடிச்சிட்டேனு ரொம்ப பீத்திக்காத.. பாடி ரொம்ப வீக்க இருக்கு" என்று சொல்லிவிட்டு செல்வார். இதில் வரும் ஐதராபாத் அணியாக வடிவேலுவையும், மும்பை அணியாக மனோபாலாவையும் மாற்றி, "வின் பண்ணியாச்சுனு ரொம்ப சந்தோஷப்பட்டுக்காத.. பாண்டியாவுக்கு அப்புறம் எல்லாரும் டெய்லண்டரா வச்சிருக்க" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் பாடி ரொம்ப வீக்க இருக்கு பாஸ் மொமண்ட்.

ipl 2025 memes MI vs SRH Mumbai Indians

சண்டக்கோழி படத்தில், "ஒரு பையன் கையை வச்சிட்டு போய்ட்டான்.. என்பார். அதற்கு எதிர்முனையில் இருப்பவர், ஏன் அண்ணே.. அண்ணே ஊர்ல இல்லையா என்று கேள்வி எழுப்ப, கைய வச்சதே அண்ணே மேல தான்யா" என்பார். அதனை வில்லனாக கம்மின்ஸையும், விஷாலாக மும்பை அணியையும் மாற்றி, "அண்ணனை ஒருத்தன் சைலன்ஸ் பண்ணிட்டு போயிட்டான்.. கம்மின்ஸ் அண்ணன் கிட்ட சொல்லுங்கணே.. யோவ் கம்மின்ஸ் அண்ணனை தான்யா சைலன்ஸ் பண்ணிட்டாங்க" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ் ரகம்.

ipl 2025 memes MI vs SRH Mumbai Indians

கும்கி படத்தில் விக்ரம்பிரபு, தனது மாமாவான தம்பி ராமையாவை பார்த்து, "கொம்பன் இறங்கிட்டான் மாமா" என்று சொல்வார்.. ரிக்கல்டன் அவுட்டான பந்தை நோ-பாலாக அறிவிக்கப்பட்ட பின், விக்ரம்பிரபுவாக சிஎஸ்கே ரசிகர்களையும், தம்பி ராமையாவாக ஐதராபாத் அணியையும் மாற்றி, "அம்பானி இறங்கிட்டான் மாமா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா ரகம்.

ipl 2025 memes MI vs SRH Mumbai Indians

மாஸ் படத்தில் தன்னை கடத்தியவர்களை அடித்துவிட்டு சூர்யா, "இப்போ புரியுதா.. என்னை ஏன் மாஸ்னு கூப்பிடுறாங்கனு" என்று சொல்வார். அதனை அப்படியே சூர்யாவாக ஆகாஷ் அம்பானியை மாற்றி, "இப்போ புரியுதா.. வில் ஜாக்ஸை வாங்கியதற்கு ஏன் ஆர்சிபி அணிக்கு கை கொடுத்தேனு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறிக்குது தெறிக்கு மாஸ் மொமண்ட்.

ipl 2025 memes MI vs SRH Mumbai Indians

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் கார்த்தியை பார்த்து சந்தானம், "என்னை பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையாடா" என்று சொல்வார்.. அதில் வரும் சந்தானமாக ரோகித் சர்மாவையும், கார்த்தியை டிராவிஸ் ஹெட்டாகவும் மாற்றி, "என்னை பார்த்தா உனக்கு பாவமாவே இல்லையாடா" என்று சொல்வதாக உருவக்கப்பட்டுள்ள மீம் எப்படி போனாலும் அடிக்கிறாங்க ரகம்.

ipl 2025 memes MI vs SRH Mumbai Indians
Story first published: Friday, April 18, 2025, 11:00 [IST]
Other articles published on Apr 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+