Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்,கோலிக்கு எல்லாம் மாற்று வீரர்களை இந்திய அணி விரைவில் கண்டுபிடித்துவிடுவார்கள் -மைக்கேல் வாஹன்

மும்பை : டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தூண்களாக இந்த மூன்று வீரர்களும் விளங்கிய நிலையில் தற்போது விடை பெற்று இருக்கிறார்கள். இதனால் இந்த மூன்று வீரர்களுக்கு மாற்று வீரர்கள் கிடைப்பார்களா என்ற கலக்கம் இந்திய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

t20 world cup india cricket team rohit sharma

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி மிக விரைவில் இந்த மூன்று வீரர்களுக்கு மாற்று வீரர்களை கண்டுபிடித்து விடுவார்கள் என கூறியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டிக்கு மிகச் சிறந்த கேப்டனாக விளங்குகிறார்.

ரோகித் களத்தில் அறிவுபூர்வமாக செயல்படுகிறார். மும்பை இந்தியன்ஸ் அணி ஏன் அவரை கேப்டன் பதவியில் இருந்து மாற்றியது என்பதை என்னால் யோசிக்கக்கூட முடியவில்லை. பொறுத்தவரை அவர் மிகவும் பாராட்டுக்குரிய வீரராக இருக்கின்றார். விராட் கோலி நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தொடர்ந்து விளையாடுவார்.

தற்போது டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் இவ்விரு வீரர்களும் ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து விளையாடுவார்கள். ஜடேஜாவை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கின்றார். தற்போது டி20 போட்டியில் இருந்து விடை பெற்று இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இந்த மூன்று வீரர்களும் இன்னும் நிறைய ஐசிசி கோப்பையை வென்றிருக்க வேண்டும்.

ரோகித் சர்மா தனது முதல் டி20 உலக கோப்பையை 2007 ஆம் ஆண்டு வென்றார். அதன் பிறகு மீண்டும் உலக கோப்பையை வெல்ல அவருக்கு 17 ஆண்டுகள் தேவைப்பட்டு இருக்கின்றது. தற்போது வெள்ளை நிற கிரிக்கெட் மண்ணில் உலகக் கோப்பை கடைத்து விட்டது. தற்போது இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த மூன்று வீரர்களும் கவனம் செலுத்த வேண்டும். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிச்சயமாக இந்த மூன்று வீரர்களையும் மிஸ் செய்வார்கள். ஆனால் இவர்கள் நிச்சயம் ஈசியாக மாற்றப்படுவார்கள். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் பலர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, July 2, 2024, 20:01 [IST]
Other articles published on Jul 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+