Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னிக்கு ஜடேஜா கோடீஸ்வரன்.. ஆனால் அன்னிக்கு கையில் 10 ரூபாதான்!

பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத வீரராகவும், மாபெரும் கோடீஸ்வர வீரராகவும் திகழும் ரவீந்திர ஜடேஜா ஒரு காலத்தில் வெறும் பத்து ரூபாயுடன் பரிதவித்தவராம்.

இந்தத் தகவலை ஜடேஜாவே வெளியிட்டுள்ளார் ஒரு பேட்டியில்.

இதுகுறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு ஜடேஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

ஐபிஎல்லின் காஸ்ட்லி வீரர்

ஐபிஎல்லின் காஸ்ட்லி வீரர்

ஜடேஜா 2012ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின்போது பெரும் தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் ஆவார்.

20 லட்சம் டாலருக்கு

20 லட்சம் டாலருக்கு

ஆல் ரவுண்டரான ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 லட்சம் டாலருக்கு வாங்கியது.

அது கஷ்ட காலம்

அது கஷ்ட காலம்

இன்று பெரும் கோடீஸ்வரராக ஜடேஜா திகழ்ந்தாலும் ஒரு காலத்தில் கையில் காசு இல்லாமல் கஷ்டப்பட்டவராம். இதுகுறித்து ஜடேஜா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது...

வெறும் பத்து ரூபாய்தான்

வெறும் பத்து ரூபாய்தான்

என்னிடம் அப்போதெல்லாம் காசே இருக்காது. ஒரு நேரத்தில் வெறும் பத்து ரூபாயுடன் ஒரு நாள் முழுவதையும் நான் கழிக்க நேரிட்டது.

தண்ணீர் வாங்கக் கூட காசு கிடையாது

தண்ணீர் வாங்கக் கூட காசு கிடையாது

வெளியூர்களுக்குப் போய் கிரிக்கெட் ஆடப் போகும்போது கையில் காசு இல்லாமல் தவித்துள்ளேன். தண்ணீர் வாங்கக் கூட கையில் காசு இல்லாமல் திண்டாடியுள்ளேன்.

காசை அளந்து பார்த்து செலவிடுவேன்

காசை அளந்து பார்த்து செலவிடுவேன்

இப்போதும் நான் பழையவற்றை மறக்க நினைத்ததில்லை. தேவையில்லாமல் செலவழிக்க மாட்டேன். தேவையான அளவுக்குத்தான் கையில் பணம் வைத்திருப்பேன்.

டிரஸ்ஸுக்காக கூட செலவழிக்க மாட்டேன்

டிரஸ்ஸுக்காக கூட செலவழிக்க மாட்டேன்

டிரஸ்ஸுக்காகவோ சாப்பாட்டுக்காகவோ அதிகம் செலவழிக்க மாட்டேன். அனாவசியச் செலவுகளே என்னிடம் கிடையாது

கிரிக்கெட் நிறைய கொடுத்திருக்கிறது

கிரிக்கெட் நிறைய கொடுத்திருக்கிறது

எனக்கு கிரிக்கெட் நிறைய கொடுத்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் நான் செலவழிக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை என்றார் ஜடேஜா.

குதிரைப்பிரியர்

குதிரைப்பிரியர்

ஜடேஜாவுக்கு குதிரை என்றால் நிறைய இஷ்டமாம். சில குதிரைகளையும் அவர் சொந்தமாக வைத்துள்ளாராம். ஆனால் அவரது சிறார் வயதில் வீட்டில் கஷ்ட நிலை இருந்ததால் சொந்தமாக ஒரு நாய் கூட வளர்க்க முடியாதவராக இருந்தாராம்.

அடுத்த வேளை சாப்பாடு எப்போது வரும் என்றே தெரியாத போது, செல்லப் பிராணிகளை எங்கே வளர்ப்பது என்று கடந்த காலத்தின் கஷ்ட ரேகை முகத்தில் படிய சிரிக்கிறார் ஜடேஜா.

Story first published: Tuesday, September 17, 2013, 16:32 [IST]
Other articles published on Sep 17, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+