Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸுடன் கொச்சி டஸ்கர்ஸ் இன்று மோதல்

Sachin and Muralitharan
மும்பை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸும், கொச்சி டஸ்கர்ஸ் கேரளாவும் இன்று மோதுகின்றன.

சச்சின் டெண்டுல்கருக்கும், முரளிதரனுக்கும் இடையிலான மற்றும் ஒரு மோதலை இன்று ரசிகர்கள் பார்க்கவுள்ளனர். அதேபோல சச்சினுக்கும், ஸ்ரீசாந்த்துக்கும் இடையிலான மோதலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கை வீரர்கள் அதிக அளவில் நிறைந்துள்ள இந்த இரு அணிகளின் மோதலும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அணியில் சச்சின், கிரன் போலார்ட், லசித் மலிங்கா என பெரும் பெரும் வீரர்கள் உள்ளனர். அம்பட்டி ராயுடு அபாரமாக ஆடி வருகிறார்.

கொச்சி அணியில் கேப்டன் மஹளா ஜெயவர்த்தனே, முரளிதரன், ஸ்ரீசாந்த் ஆகியோர் முக்கியமானவர்கள். ஆர்.பி.சிங்கும் உள்ளார். ஆனால் இவர்களின் பார்ம்தான் சற்று கவலைக்குரியதாக உள்ளது.

லசித் மலிங்காவின் பந்து வீச்சு சிறப்பாக உள்ளது. இதை மஹளா ஜெயவர்த்தனே தலைமையிலான அணி எப்படி சமாளிக்கும் என்பது கேள்விகளை எழுப்பியுள்ளது.

கிரன் போலார்ட் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் மும்பைக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார். இன்று மும்பை அணி 3வது வெற்றியைப் பெற அவர் உதவுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ராஜஸ்தான்-கொல்கத்தா மோதல்

முன்னதாக இன்று மாலை 4 மணியளவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்கியது.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Wednesday, December 7, 2011, 18:46 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+